child and child body  
இந்தியா

“குழந்தையின் சடலத்தின் மீது போடப்பட்ட உப்பு” - உயிர் வரும் என காத்திருந்த பெற்றோர்கள்.. இரண்டு மணி நேரம் போராடி உடலை மீட்ட போலீசார்!

கைப்பேசியில் உள்ள குர்ஆன் துதியை குழந்தையின் காதுக்கு அருகில் வைத்து...

Mahalakshmi Somasundaram

கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தை சேர்ந்த அமினா என்ற சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​எதிர்பாராதவிதமாக எதிரே இருந்த வீட்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்த நிலையில் நீண்ட நேரமாக யாரும் கவனிக்காததால் குழந்தை தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டது. பின்னர் குழந்தை காணாமல் போனதை அறிந்த பெற்றோர்கள் அவரது உறவினர்களின் உதவியுடன் வீட்டிற்கு அருகில் தேடி பார்த்த போது குழந்தை தண்ணீரில் நவநகர் மூழ்கி உயிரிழந்தது தெரிவந்தது. அதனை தொடர்ந்து உறவினர்கள் அழித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தில் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

குழந்தை இறந்துவிட்டதை ஏற்றுக்கொள்ளாத குடும்பத்தினர், எப்படியாவது குழந்தையைக் காப்பாற்ற நினைத்துள்ளார். நீரில் மூழ்கியவரை உப்பில் மூழ்கடித்தால், அவர் மீண்டும் உயிர் பெற்று விடுவார் என்ற மூடநம்பிக்கையை முழுமையாக நம்பிய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், பிரேத பரிசோதனை குணத்திற்கு வெளியில் குழந்தையின் உடலை முகம் தெரியும் வகையில் உப்பில் புதைத்து வைத்தனர். மேலும் கைப்பேசியில் உள்ள குர்ஆன் துதியை குழந்தையின் காதுக்கு அருகில் வைத்து, குழந்தையை மீண்டும் உயிர்ப்பிக்க ஒரு தீவிர முயற்சியை மேற்கொண்டனர்.

அவர்கள் குழந்தையின் உடலை சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக உப்பில் வைத்திருந்தனர். ஆனால், எந்த அற்புதமும் நிகழாததாலும், குழந்தையிடம் எந்த அசைவும் காணப்படாததாலும், பெற்றோர் ஏமாற்றமடைந்தனர். பின்னர் மருத்துவரின் ஆலோசனை மற்றும் போலீசாரின் அறிவுறுத்தலின்படி சடலம் உப்பில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு, பெற்றோர்கள் உடலை எடுத்துச் சென்று இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேல் குழந்தையை இழந்த பெற்றோரை தேற்றி குழந்தையின் உடலை போலீசார் மற்றும் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆபத்தில் சிக்கி உயிர் இருப்பவரை யாரும் இது போன்ற மூட நம்பிக்கைகளை நம்பி, இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது என்று போலீசாரும் மருத்துவர்களும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து உயிர்களைக் காப்பாற்ற முதல் கட்டமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். என மருத்துவர்கள் அறிவுரை கூறினார்கள்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.