இந்தியா

“நாட்டு மக்களின் சேமிப்பு அதிகரிக்கும்” - நாளை முதல் அமலுக்கு வரும் புதிய ஜிஎஸ்டி.. பிரதமர் மோடி சிறப்பு உரை!

வியாபாரிகள், சிறு குறு தொழில் செய்வோர் விவசாயிகள் என அனைவரும் பயனடைவார்கள்..

Mahalakshmi Somasundaram

நாளை முதல் குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி அமலுக்கு வரும் நிலையில் இன்று அது குறித்து நட்டு மக்களுக்கு சிறப்புரையாற்றிய பிரதமர் மோடி “நாளையிலிருந்து ஜிஎஸ்டி இரண்டு அடுக்குகள் மட்டுமே செயலில் இருக்கும், இந்த சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சியில் முக்கியமான மைல்கல்லாக இருக்கும் இந்த சீர்திருத்தத்தின் வியாபாரிகள், சிறு குறு தொழில் செய்வோர் விவசாயிகள் என அனைவரும் பயனடைவார்கள். 

இந்த இரண்டு அடுக்கு வரியால் பல்வேறு அத்திவாசியா பொருட்களின் விலை குறையும். மேலும் நாட்டு மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் இந்திய பொருளாதாரத்தின் புதிய அத்தியாயம் நாளை முதல் தொடங்குகிறது. உள்நாட்டில் தயாரிக்கும் பொருட்களுக்கே நாட்டு மக்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதனால் மக்கள் குறைந்த விலையில் விருப்பமான பொருட்களை வாங்க முடியும், அந்நிய நேரடி முதலீடுகளும் இதன் மூலம் அதிகரிக்கும். 

இந்தியா சுய சார்பை எட்டுவதற்கு ஜிஎஸ்டி உதவும், 99 சதவீத பொருட்கள் ஐந்து சதவீத வரி விதிப்பின் கீழ் வரும். குறிப்பாக இதன் மூலம் நடுத்தர மக்கள் அதிக பயனடைவார்கள் என பல்வேறு பெயர்களால் இருந்த மறைமுக வரிகளின் சிக்கல்கள் ஜிஎஸ்டி வரியால் அகன்றுள்ளது” என தெரிவித்துள்ளார். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.