நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வெளியிட்டுள்ள வீடியோவில் பிரதமர் மோடி தனது செல்ஃபோனை ஒட்டுக்கேட்பதாகவும் அதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் பிரதமரை மீண்டும் ஒருமுறை நேருக்கு நேர் விவாதத்துக்கு அழைத்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர் பிரதமர் தனது செல்ஃபோனை கண்காணிப்பதாக குற்றம் சாட்டினார்.
அத்துடன், "உங்கள் இடம், உங்கள் மேடை -ஆனாலும் விவாதம் செய்ய உங்களுக்கு ஸ்கிரிப்ட் தேவை. பதட்டமாக இருக்கிறீர்கள் போலவே" என விவாதத்துக்கு அழைத்து பேசியுள்ளார்.
"பரவாயில்லை நீங்கள் டெலி ப்ராம்ப்டரை எடுத்து வாருங்கள்.உங்களுக்கு விருப்பமான ஒருவரையே நடுவராக வைத்துக்கொள்ளுங்கள்" என்றும் கிண்டலாக பேசியிருக்கிறார்.
"நீங்கள் வந்தாலே போதும்.. இந்த நாடு யார் துரோகி என்று தெரிந்துகொள்ள வேண்டும். நான் உறுதியாக சொல்கிறன், என்னுடன் விவாதம் செய்தால் அத்துடன் பிரதமர் மோடியின் அரசியல் வாழ்க்கை முயடிவுக்கு வரும்.
இது அவருக்கும் தெரியும், எனக்கும் தெரியும். அவர் என்னை அடிக்கடி தேச நலனுக்கு எதிரான நபராக சித்தரிக்கிறார். நான் யார் நாட்டுக்கு எதிரானவர் என்பதை காட்ட விரும்புகிறேன். யார் யாரால் கட்டுப்படுத்தப்படுகிறார் என்பதையும்.
ஒன்றைக் கவனியுங்கள். அவன் மனதில் ஒரு சிறு பயம் இருக்கிறது, ஏனென்றால் அவன் இனி என்னைப் பற்றிக் கருத்துச் சொல்வதில்லை. அவன் இனி என்னைத் தாக்குவதில்லை. aஅவர் மிகமிக கவனமாக இருக்கிறார். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது, நண்பர்களே." எனப் பேசியுள்ளார்.
ராகுல் காந்திக்கு ஆதரவாக அகிலேஷ் யாதவ் குரல் கொடுத்திருக்கிறார். சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ், "இன்றைய தொழில்நுட்பத்தை யாரும் நம்பக்கூடாது. செயற்கை நுண்ணறிவு யுகத்தில் எதுவும் சாத்தியமே." எனக் கூறியுள்ளார்.
ராகுல் காந்தியின் வீடியோவை பாஜக சாடியுள்ளது. கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர், "ராகுல் காந்தியிடம் நான் முழு மரியாதையுடன் உறுதியாகச் சொல்லக்கூடியது என்னவென்றால், அவர் தன் தலையைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அவருடைய தொலைபேசியை ஒட்டுக் கேட்க யாரும் மெனக்கெடுவதில்லை. அதில் யாருக்கும் ஆர்வமும் இல்லை. ஒருவேளை யாருக்காவது அதில் ஆர்வம் இருந்தால், அது அவருடைய மூளை ஏன் நாளுக்கு நாள் பொய்களின் அடிப்படையிலேயே இயங்குகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்காகத்தான்." எனப் பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.