விஜய் நடித்த ஜனநாயகம் படம் வெளியிடுவதற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படாத நிலையில் தொடர்ந்து சிக்கல்கள் நீடித்து வருகிறது. ஏற்கனவே தனி நீதிபதி ஆஷா “படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும்” என பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தணிக்கை குழு மேல்முறையீடு செய்துள்ள நிலையில் இந்த வழக்கின் விசாரணை வரும் (ஜன 21) தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே இதனை எதிர்த்து படக்குழு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மனு அளித்த நிலையில் அதற்கு தணிக்கை குழு அப்பில் செய்திருக்கிறது.
இதனை எதிர்த்தும் விஜக்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் பல்வேறு சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் குரல் கொடுத்த நிலையில் காங்கிரஸ் எம்பிக்கள் விஜய் ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் ராகுல் காந்தி அவர்கள் விஜய்க்கு போன் மூலம் ஆதரவு தெரிவித்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஜநாயகன் படத்திற்கு ஆதரவாக பிரதமர் மோடியை எதிர்த்து பதிவிட்டுள்ளார்.
அதில் “ ‘ஜன நாயகன்’ நிகழ்ச்சியைத் தடுக்க தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மேற்கொண்ட முயற்சி தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதலாகும். திரு. மோடி, தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் உங்களால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது” என நேரடியாக மோடியை டேக் செய்து பதிவிட்டிருக்கிறார். ஏற்கனவே காங்கிரஸ் எம்பிக்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தி ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாகி உள்ளது.
இதன் மூலம் காங்கிரஸ் விஜய்யை கூட்டணிக்கு கொண்டு வர பார்க்கிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ஏற்கனவே காங்கிரஸ் எம்பிக்கள் கருத்துக்களை கடுமையாக எதிர்த்த தமிழிசை சௌந்தரராஜன் இதற்கும் பாஜகவிற்கு எந்த தொடர்பும் இல்லை எப்போது விஜய்யை நாங்கள் எதிரியாக பார்க்கவில்லை என தெரிவித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் இதனை பாஜக தான் செய்கிறது என ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டுவது போல பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.