ratan tata 
இந்தியா

"சகோதரர்கள் முதல் சமையல்காரர் வரை" - சொத்துக்களை கொடுத்த வள்ளல் டாடா.. அந்த மனுசு தான் சார் கடவுள்!

Anbarasan

இந்தியாவோட முக்கிய தொழிலதிபராக இருந்தவர் தான் ரத்தன் டாடா அவர்கள் ,இவர் போன (அக்டோபர் 9), இறந்துட்டாரு. அவரோட சொத்து மதிப்பு சுமார் 3,800 கோடி ரூபாய்னு சொல்றாங்க. அந்த சொத்துக்கள் யார் யாருக்கு சொந்தம்னு அவர் எழுதி வச்ச உயில் வெளிவந்து இருக்கு,அதுல அவர் சகோதரர்கள் தொடங்கி அவோரோட செல்ல பிராணிகள் வரைக்கும், யாரையும் விடாம, ஒவ்வொருத்தர் பேரையும் போட்டு தெளிவா எழுதி இருக்காரு.

தனிப்பட்ட சொத்துக்களில் ஒரு பெரிய பங்கும், அவரோட டாடா சன்ஸ் பங்குகளும் , "ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் ஃபவுண்டேஷன் மற்றும் ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் டிரஸ்ட்-க்கு போகுது". இது ரெண்டும் அவர் நடத்தி வந்த தொண்டு நிறுவனங்கள்,இவை தொடர்ந்து இயங்கி மக்களுக்கு நல்லது செய்யணும்னு ரத்தன் டாடா அவர்கள் இதை பண்ணி இருக்காரு.

இதை தவிர்த்து மற்ற சொத்துக்களில், சில குறிப்பிட பங்கை அவரோட, முன்னாள் டாடா குரூப் ஊழியரும் பழைய நண்பருமான மோகினி தத்தாவுக்கு எழுதி வெச்சிருக்காரு,மேலும் அவரோட சகோதிரிகளான,ஷிரீன் ஜெஜீபாய், டியானா ஜெஜீபாய் ஆகியவர்களுக்கும்.ஜூஹூல இருக்குற வீட்டை ரெண்டு பங்கா பிரிச்சி,அவரோட அண்ணன் ஜிம்மி டாட்டாவுக்கு அவரோட மற்ற சகோதரர்களான சிமோன் டாடா, நோயல் டாடாவுக்கு எழுதியிருக்காரு.

அவரோட நீண்ட நாள் உதவியாளர் சாந்தனு நாயுடு, 30 வருஷமா சேவை செஞ்ச பட்லர் சுப்பையா, இவங்களுக்கும் பங்கு இருக்கு. சாந்தனு நாயுடுவோட வெளிநாட்டு படிப்பு கடன தள்ளுபடி பண்ணியிருக்காரு,மேலும் அவரோட பக்கத்துக்கு வீட்டுக்காரருக்கு கொடுத்த கடனையும் தள்ளுபடி, பண்ண சொல்லி இருக்காரு, அதுமட்டுமல்லாமல் அவருகிட்ட இருந்து கடன் வாங்குன யார்கிட்டயும், அத திரும்ப வாங்க வேண்டாம்னு எழுதியிருக்காரு.

அவர்கிட்ட வேலை செஞ்ச கார் ஓட்டுனர்கள், கார்களை சுத்தம் செய்தவர்கள் என எல்லோருக்கும் எவ்ளோகுடுக்கணும் என்பதையும், அவர்கிட்ட ஆறு வருடபங்களுக்கு மேல வேலைசெஞ்சா எல்லார்க்கும்,பதினைந்து லட்சம் கொடுக்கணும் என்று உயிலில் குறிப்பிட்டுள்ளார்.இதுல குறிப்பிடக்கூடிய செய்து, அவர்கிட்ட வேலை செஞ்ச எல்லா பணியாளர்களையும் மறக்காம அவர்களுக்கு தேவையான கொடுத்திருக்காரு.

அவருடைய செல்ல பிராணிகளான ஜெர்மன் சிப்பட்டுக்கும் மற்றும் டிடோவுக்கும்,மூன்றுமாதத்திற்கு முப்பது ஆயிரம் ரூபாய் ஒதுக்கியிருக்கார்,இதற்கான பொறுப்புகளை தனது நம்பிக்கையான சமையல்காரர் ராஜுவிடம் கொடுத்துள்ளார்,இப்படி அவருடைய எல்லா சொத்துக்களையும் சரிவர பிரித்து உயில் எழுதியுள்ளார்.

இதை குறிப்பிட்டுள்ளபடி யாருக்கேனும் சொத்துக்களை தர மறுத்தால், மறுத்தவருக்கு வர வேண்டிய நியாமான சொத்துக்களும் வராது என குறிப்பிட்டுள்ளார் மேலும் இவற்றை எல்லாம் யார் நிறைவேற்ற வேண்டு என்பதையும் தெளிவாக எழுதியுள்ளார்.

இப்படி அனைவரின் நலனுக்காகவும், யோசித்து அவர் எழுதி வைத்த இந்த உயிலை பார்த்த அவரின் பணியாளர்கள் கண்களில் கண்ணீருடன் நெகிழ்ச்சி அடைந்தனர்.இது அவர் உயிரோடு இருக்கும் வரை அவருடைய மருத்துவர் மற்றும் வக்கீல் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்