"நீயே கொன்னுடு.. இல்லனா என் வீட்லயே என்னை கொன்னுடுவாங்க" - காதலனை நம்பி.. காதலை நம்பி.. இப்போ எல்லாம் போச்சு!

ஒரு கரண்ட் கம்பத்தில் மோதியபடி கீழே விழுந்திருந்தது விக்னேஸ்வரியின் வண்டி அருகிலேயே,விக்னேஸ்வரியும் தலையில் பலத்த காயத்துடன் விழுந்து கிடந்துள்ளார்,
vigneswari
vigneswari
Published on
Updated on
2 min read

காஞ்சிபுரம் கொளத்தூர் பகுதியை, சேர்ந்த இருபத்தி நான்கு வயதான விக்னேஸ்வரி என்ற பெண், பிள்ளைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில், பணிபுரிந்து வந்துள்ளார், அதே தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த, இருபத்தி ஏழு வயதான புதுக்கோட்டையை சேர்ந்த தீபனும், விக்னேஸ்வரியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கின்றனர்.

இதனை அறிந்த,விக்னேவரியின் பெற்றோர்கள் மற்றும் தீபனின் பெற்றோர்கள் என இரண்டு தரப்பினருமே, இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், இதற்கான முக்கிய காரணமாக அவரகள் கூறியது இருவரும் வெவ்வேறு சாதியை சேர்த்தவர்கள் என்பதே,இதை எல்லாம் பொருட்படுத்தாத காதலர்கள் அவர்களின் காதலில், உறுதியாக இருந்துள்ளனர்.

எனவே வேறு வழியில்லாமல் இரு வீட்டாரும், கலந்து பேசி அவர்களின் உறவினர்களின் எதிர்ப்பினை மீறி திருமணம் செய்து வைக்க முடுவு எடுத்து, அதற்கான பணிகளை மேற்கொண்டனர், நாளை(ஏப்ரல் 4) விக்னேஸ்வரி,தீபனுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ள நிலையில் நேற்றைக்கு முன்தினம் இருவீட்டாரும் திருமணத்திற்கான ஆடைகளை வாங்க கடைக்கு சென்றனர்.

திருமணத்திற்கான உடைகளை எடுக்கவே,மாலை ஏழு மணியான நிலையில் தீபன், விக்னேஸ்வரியை அவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் ஆழைத்துச்சென்று விட்டுவிட்டு, தாம்பரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார், தீபன் கிளம்பிய சிறிது நேரத்திலே விக்னேஸ்வரிக்கு கால் செய்து "இன்று உன்னுடன் பேச நேரமே கிடைக்கல கொஞ்சம் தனியா பேசணும் வா நான் உன் வீட்டுக்கு அருகில் தான் இருக்கேனு சொல்லி இருக்காரு".

இதனை தொடர்ந்து இரவு எட்டு மணியானதால், பெற்றோர்கள் திருமணம் நிச்சயித்த பெண்ணை, வெளியில் விடமாட்டார்கள் என்பதனால், விக்னேஸ்வரி தனது தங்கையிடம் மட்டும் சொல்லிவிட்டு, தீபனை பார்க்க சென்றுள்ளார், வெகுநேரமாகியும் அவளுடைய அக்கா வீட்டிற்கு வரவில்லை என்பதால் பயந்த விக்னேஸ்வரியின் தங்கை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

எனவே பெற்றோர் இரவு முழுவதும் விக்னேஸ்வரியை, தேடியிருக்கின்றனர் எங்கு தேடியும் விக்னேஸ்வரி கிடைக்காத நிலயில், விக்னேஸ்வரியின் போனில் இருந்து பெற்றோருக்கு கால் செய்த யாரோ ஒருவர் ஸ்ரீபெரும்புதூர் மயானத்திற்கு அருகில் உங்கள் மக்கள் மயக்கத்தில் கிடக்கிறார் என தகவல் கூறியுள்ளனர்.

உடனடியாக அங்கு சென்று பார்த்த பெற்றோருக்கு, அதிர்ச்சிதரும் வகையில் அங்கு இருந்த ஒரு கரண்ட் கம்பத்தில் மோதியபடி கீழே விழுந்திருந்தது விக்னேஸ்வரியின் வண்டி அருகிலேயே,விக்னேஸ்வரியும் தலையில் பலத்த காயத்துடன் விழுந்து கிடந்துள்ளார்,உடனடியாக மருத்துவமைக்கு அழைத்து சென்றபோது, ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விபத்து நடந்ததாக அனைவரும் நினைத்து கொண்டு போலீசில் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த, போலீசார் பார்த்த உடனே தெரிவித்து விட்டனர், இது விபத்து இல்லை தெளிவாக பிளான் செய்யப்பட்ட கொலை என்று,இதனை அடுத்து பிரேத பரிசோதனையில் விக்னேஸ்வரியை யாரோ தலையில் கற்களை கொண்டு சரமாரியாக குத்தியதாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக, மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து விசாரணை நடத்தியா போலீசார், தீபனின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதை தலைமறைவாகி உள்ள தீபனை . போலீசார் தேடிவந்த நிலையில் புதுக்கோட்டையில் சென்று தீபனை பழிசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம் அழைத்து வந்து, விசாரித்ததில் நேற்று முன்தினம் விக்னேஸ்வரி என்னை கட்டாயப்படுத்தி இப்போதே உன்னுடனே என்னை அழைத்து சென்றுவிடு என்று கூறியபோது எனக்கும் விக்னேஸ்வரிக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

அப்பொழுது விக்னேஸ்வரி என்னை இங்கேயே கொன்றுவிடு நான் வீட்டுக்கு சென்றால் என் வீட்டில் உள்ளவர்கள் என்னை கொன்று விடுவார்கள். எனக் கூறி என்னிடத்தில் தகராறில் ஈடுபட்டபோது நான் பலமாக அடித்ததில் விக்னேஸ்வரி மயக்கமடைந்து கீழே விழுந்தார், அப்பொழுது நான் கீழே கிடந்த டைல்ஸ் கல்லை எடுத்து விக்னேஷ்வரியின் தலை மற்றும் முகத்தில் பல இடங்களில் தாக்கி கொலை செய்துவிட்டு விபத்து நடந்தது போல ஜோடித்து விட்டு நான், அங்கிருந்து தப்பி சென்றேன் என தீபன் போலீசாரிடம் ஒப்புக்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com