ஹரியானா மாநிலம், யமுனா நகர் ஷாம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் 45 வயதுடைய ஜஸ்பீர் சிங். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 40 வயதுடைய பல்ஜிந்தர் கவுர் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் இவர்களுக்கு 25 வயதில் கோமிட் ரதி என்ற மகன் உள்ளார். படித்து முடித்த கோமிட் ரதி எந்த வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வந்திருக்கிறார். மேலும் அக்கம் பக்கத்தினரிடம் தேவையற்ற பிரச்சனைகளை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.
எனவே இவரது தாய் மகன் கோமிட் ரதியிடம் மிகவும் கண்டிப்பாக நடந்து கொண்ட நிலையில் மகன் மற்றும் தாய்க்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் கோமிட் ரதி பலிக்காது ஊரை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்த நிலையில் அதனை அறிந்த பல்ஜிந்தர் கவுர் “நீ மணி கணக்கா போன் பேசுறப்பவே நெனச்ச ஒரு புது பிரச்சனை எடுத்துட்டு வர போற” என காதலை கைவிட வேண்டும் என கூறி வந்திருக்கிறார். இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டிற்கு கோமிட் ரதியை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வேலைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.
அங்கு வேலை செய்து வந்த கோமிட் ரதி தொடர்ந்து அதே பெண்ணை காதலித்து வந்த நிலையில் அவரது தாய் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்திருக்கிறார். இதனை ஆத்திரமடைந்த கோமிட் ரதி கடந்த ஆண்டு (டிச 24) ஆம் தேதி காலை யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு சென்று தாயை அடித்தும் கழுத்தை நெரித்தும் கொலை செய்திருக்கிறார். மேலும் உடலை வீட்டிற்கு வெளியில் இருந்த தண்ணீர் தொட்டியில் போட்டு விபத்து போல சித்தரித்திருக்கிறார்.
பல்ஜிந்தர் கவுர் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்து கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தெரிவித்திருக்கின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த பல்ஜிந்தர் கவுர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதை அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அப்போது அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்த போது கோமிட் ரதி இந்தியாவிற்கு வந்தது தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து அவர் மீது சந்தேகமடைந்த போலீசார் கோமிட் ரதியை பிடித்து விசாரணை செய்த போது காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் மகனே நண்பர்களுடன் சேர்ந்து தாயை கொலை செய்தது தெரியவந்தது. எனவே கோமிட் ரதி மற்றும் அவரது நண்பர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்துள்ளனர். காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் மகனே தாயை கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.