இந்தியா

கள்ளகாதலியின் உடலை துண்டு துண்டாக வெட்டி ஃப்ரிட்ஜில் மறைத்த கொடூரம்! - மனைவிடம் கூறிவிடுவேன் என மிரட்டி பணம் பறித்தால் விபரீதம்...

ஆன்லைன் டெலிவரி தளத்திலிருந்து கத்தி ஒன்றினை வாங்கி, உடலைத் துண்டு துண்டாக வெட்டியதாகக் கூறப்படுகிறது..

மாலை முரசு செய்தி குழு

விசாகப்பட்டினம் நகரில் உள்ள கஜுவாக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எல்.வி. நகரில், 35 வயதான கடற்படை ஊழியர் ஒருவர், தனது வீட்டில் வைத்து கள்ளக்காதலியை கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, சில பாகங்களை அழித்து, மற்ற பாகங்களை குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேகா இந்திய கடற்படைக் கப்பலில், பணியாற்றும் 30 வயதான கடற்படை அதிகாரி ரவீந்திரா, 2021ல் 'மிங்கிள்' என்ற டேட்டிங் செயலி மூலம் மௌனிகா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்ததாக காவல்துறை தெரிவித்தனர். இந்த சந்திப்புகள் படிப்படியாக, அவர்களுக்குள் ஒரு காதல் உறவை மலரச்செய்தது. இதனையடுத்து மார்ச் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் ரவீந்திராவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததை அடுத்து, மௌனிகா அவரது வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அவர்கள் இருவரும் பல மணி நேரம் வீட்டில் தங்கியிருந்தனர். ஆனால் மாலையில் அவர்களுக்குள் சண்டை நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆத்திரத்தின் உச்சத்தில், ரவீந்திரா மௌனிகாவை மூச்சுத்திணற வைத்து கொலை செய்துள்ளார். அதன்பின்பு, அவர் ஒரு ஆன்லைன் டெலிவரி தளத்திலிருந்து கத்தி ஒன்றினை வாங்கி, உடலைத் துண்டு துண்டாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையின்படி, ரவீந்திரா அப்பெண்ணின் உடற்பகுதியிலிருந்து தலை, கால்கள் மற்றும் கைகளைப் பிரித்தெடுத்துள்ளார். அவர் கால்களையும் இடுப்புப் பகுதியையும் ஒரு டிராலி பையில் அடைத்து, உடற்பகுதியை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, தலையையும் கைகளையும் வேறு இடத்திற்குக் கொண்டு சென்று எரித்ததாகக் கூறப்படுகிறது.

அதன் பின்பு, ரவீந்திரா பின்னர் காவல் நிலையத்திற்குச் சென்று, தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்ததாக காவல்துறை தெரிவித்தது. இதனையடுத்து அதிகாரிகள் அவரது இல்லத்திலிருந்து சில உடல் பாகங்களை மீட்டெடுத்துள்ளனர். இருப்பினும், தலை காணவில்லை, மேலும் ரவீந்திரா அதை வேறு எங்கோ அப்புறப்படுத்தியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். தலை மற்றும் மீதமுள்ள உடல் பாகங்களைக் கண்டறிய ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

இந்த கொலைக்கு காரணமாக ரவீந்திரா கூறுவது, அந்தப் பெண் தன்னிடம் பணம் வாங்கியதாகவும், தனது உறவை தன் மனைவியிடம் வெளிப்படுத்திவிடுவதாக மிரட்டியதாகவும் ரவீந்திராவிடம் கூறியிருக்கிறார். இதனால், இருவருக்கும் இடையே தகராறுகள் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பதற்றம் சமீப மாதங்களில் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.சம்பவம் நடந்த அன்று, ரவீந்திரா தனது பிளாட்டிற்கு மௌனிகாவை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் மூண்டதாகவும், அது விரைவில் வன்முறையாக மாறியதாகவும் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். சண்டையின் போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் அந்த இல்லத்திற்குள் அப்பெண்ணை மூச்சுத்திணறடித்துக் கொன்றதாகப் போலீசார் கூறுகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.