திமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை..! தலை சிதைக்கப்பட்டு கொலை செய்ததன் பின்னணி? அரசியல் காரணமா எனும் கோணத்தில் விசாரணை...

தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து தீவிர விசாரணை..
திமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை..! தலை சிதைக்கப்பட்டு கொலை செய்ததன் பின்னணி? அரசியல் காரணமா எனும் கோணத்தில் விசாரணை...
Published on
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே திமுக கவுன்சிலர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலை சிதைக்கப்பட்டு கொலை, அரசியல் காரணமா? எனும் கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

திருவெறும்பூர் அருகில் உள்ள கூத்தைப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதிபுரத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மகன் ரஞ்சித்குமார் (38) இவர் கூத்தைப்பார் பேரூராட்சியில் 11 வது வார்டு கவுன்சிலராகவும், திமுக பேரூர் கழக இளைஞரணி செயலாளர்களாகவும் உள்ளார். அண்மையில் ரஞ்சித்குமார் திருவெறும்பூர் அருகிலுள்ள நவல்பட்டு   சோழமாநகரில் புதிதாக வீடு கட்டி குடியேறியுள்ளார்.

மேலும் இவர் திருவெறும்பூர் அரசு ஐடிஐ எதிரே உள்ள அரசு மதுபான கடை பாரை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில்  நேற்று இரவு தனது நண்பரை சந்தித்து விட்டு டூவிலரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் திருவெறும்பூரில் இருந்து நவல்பட்டு செல்லும் சாலையில்  புது தெரு அருகே  சென்றபோது மர்ம நபர்கள்  சிலர் அவரை வழிமறித்து தாக்கியுள்ளனர். மேலும் ரஞ்சித்குமாரை கட்டையால் தாக்கி பின்னர் அரிவாளால் தலை மற்றும் கால் தொடை பகுதியில் சரமாரியாக  வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

தலை சிதைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்து இறந்த நிலையில் கிடந்த ரஞ்சித்குமாரை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து விட்டு உடனடியாக நவல்பட்டு  போலீசாருக்கு தகவல் அளித்தனர். இது குறித்து தகவலறிந்த நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த தகவலை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து படுகொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த ரஞ்சித் குமாரின் உடலை பார்த்த கதறி அழுதனர். நவல்பட்டு போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடய அறிவியல், கைரேகை நிபுணர்கள், மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

மேலும் மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம், திருவெறும்பூர் ஏ எஸ் பி அரவிந்த் பனாவத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று விசாரித்து வருகின்றனர். தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து பல்வேறு கோணங்களில்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் நேரம் என்பதால் ஏதேனும் அரசியல் பகை காரணமா என்றும் விசாரித்து வருகின்றனர். வெட்டி படுகொலை செய்யப்பட்ட ரஞ்சித்குமார் திமுக பிரமுகர் என்பதால் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com