இந்தியா

பாடமாகிறது சாவர்க்கரின் வரலாறு !

Malaimurasu Seithigal TV

டெல்லி பல்கலைக்கழகத்தி்ல் சாவர்க்கரின் வரலாறு பாடமாக கொண்டுவரப்பட உள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ் முன்னாள் தலைவர் சாவர்க்கரின் வரலாறை, பாடமாக இணைக்க அகடமிக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான ஆறாவது பருவத் தேர்வில், அரசியல் அறிவியல் பிரிவில் சாவர்க்கர் பற்றிய பாடம் இணைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக உருது கவிஞர் முகமது இக்பாலின் பாடத்தை நீக்கி அந்த இடத்தில் சாவர்க்கரின் பாடம் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் "75 ஆண்டுகளாக இக்பாலின் பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது ஏன் எனத் தெரியவில்லை" என பல்கலைக்கழக துணைவேந்தர் யோகேஷ் சிங் தெரிவித்துள்ளார். முகமது இக்பால் இந்துஸ்தானின் கீதம் உள்ளிட்ட பல்வேறு உருது கவிதைகளை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.