இந்தியா

“சிபிஐ தலைமை செயலகத்தில் ஆஜரான விஜய்" - ஒரு மணி நேரமாக தொடரும் விசாரணை … அடுக்கடுக்காக கேள்வி எழுப்பும் அதிகாரிகள்!

ஒவ்வொருவருக்கு சம்மன் அனுப்பி கடந்த மாதம் மூன்று நாட்கள் டெல்லியில் உள்ள...

Mahalakshmi Somasundaram

கரூரில் கடந்த ஆண்டு (செப்டம்பர் 27) ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் நடத்திய பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து வழக்கு தொடரப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு சிபியை விசாரணை நடைபெற்று வருகின்றது. சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் மேலும் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி அதிகாரிகள் மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தவெக நிர்வாகிகளான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் கரூரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொருவருக்கு சம்மன் அனுப்பி கடந்த மாதம் மூன்று நாட்கள் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. தவெகவின் பிரச்சார வாகனத்தை நேரில் பார்த்து ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள் கரூர் பிரச்சார கூட்டத்திற்கு அந்த வாகனத்தை இயக்கி வந்த ஓட்டுநரிடம் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் ஏற்கனவே இது குறித்து விசாரணை நடத்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு சம்மன் அளிக்கப்பட்ட நிலையில் இன்று தனி விமானம் மூலம் விஜய் டெல்லிக்கு சென்று விசாரணைக்காக சிபிஐ தலைமை செயலகத்தில் ஆஜராகி உள்ளார். அவரிடம் இரண்டு நாட்கள் விசாரணை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என சொல்லப்படும் நிலையில் முதல் கட்ட விசாரணையை தற்போது சிபியை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணைக்காக டெல்லிக்கு சென்ற விஜய்க்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விசாரணையில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஒரு மணி நேரமாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. எதற்காக கூட்டத்திற்கு தாமதமாக வந்தீர்கள்? இடையில் வெளியில் வந்த முகத்தை காண்பிக்காதது ஏன்? துறை சம்பவ நடத்த பிறகு அங்கு இல்லாமல் தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டது ஏன்? என சிபிஐ அதிகாரிகள் கேள்வி எழுப்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் விரிவான தகவல்கள் விசாரணைக்கு பிறகே வெளிவரும் என அறியப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.