கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த மேலராமன்புதூர் பகுதியில் நின்ற சிறுமிகளை தவறான கண்ணோட்டத்தில் செல்போனில் புகைப்படம் எடுத்த நபரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைப்பு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது, மருத்துவ பணியில் இருக்கும் செவிலியர்கள் மற்றும் வெளி வேலைகளில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது. சமீபகாலமாக இது குறித்த வழக்குகள் காவல் நிலையத்தில் அதிகரித்துள்ளது, மேலும் கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று நாகர்கோவில் அடுத்த மேலராமன்புதூர் பேருந்து நிறுத்தத்தில் நின்ற சிறுமிகளை, எதிரே நின்ற 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். மேலும் சிறுமிகளை ஆபாசமாக ஆபாசமாக புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை கவனித்த அப்பகுதி மக்கள் உடனடியாக அந்த நபரை பிடித்து செல்போனை பறித்து பார்த்தபோது, சிறுமிகளின் புகைப்படங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனடியாக அந்த நபரை அடித்து உதைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து நேசமணி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, பின்னர் போலீசார் அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் நாகர்கோவில் அருகே உள்ள வெட்டூர்ணிமடம் பகுதியில் சேர்ந்த பாபு வயது 50 என்பதும் கொத்தனார் பணியை செய்து வருவதும் தெரியவந்தது, அதனைத் தொடர்ந்து போலீசார் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைம் அழைத்து சென்றனர் ,பின்னர் கைது நடவடிக்கை மேற்கொண்டு சைபர் கிரைம் போலீசார் பாபுவின் செல்போனை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.