2024-25-ம் கல்வி ஆண்டுக்கான 10, 11 -ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை இன்று காலை 9 மணியளவில் சென்னையில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
முன்னதாக 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே.19-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முன்கூட்டியே மே.16-ம் இன்று தேதி வெளியிடப்பட்டுள்ளது..
இந்த 10 -ஆம் வகுப்பு தேர்வில் 93.80% -பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல மாணவர்களை விட மாணவியரே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை வெளியிடும்போது பேசிய பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் “மாணவர்களின் மதிப்பெண்கள் மட்டுமே அவர்களை மதிப்பீடு செய்யாது.. அதைத்தாண்டி தனித்திறமையாக்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் எந்த அளவுக்கு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் அதை முழுமனதோடு பெற்றோர்கள் ஏற்க வேண்டும். இதுதான் நான் பெற்றோருக்கு வைக்கக்கூடிய வேண்டும். நம் வீட்டு பிள்ளைகளான மாணவ செல்வங்கள் எதிர்கால தூண்கள் என்று முதல்வர் ஒருவர் மட்டும் சொன்னால் போதாது.பெற்றோராகிய நாமும் மாணவர்களை எல்லா நாளும் ஊக்கப்படுத்த வேண்டும்.
தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு உடனடியாக மறு தேர்வு நடத்தப்பட உள்ளது. மாணவர்கள் மனம் தளராமல் இந்த Supplementary தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்த வேண்டும். இந்த Supplementary தேர்வுகள் மூலம் தோல்வி அடைந்த மாணவர்களும் இந்த ஆண்டே 11 -ஆம் வகுப்பு பயிலலாம் என தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்