bjp vs admk Admin
தமிழ்நாடு

கூட்டணிக்கு காத்திருக்கும் பாஜக...ஆனால் அதிமுக.,வின் பிளானே வேற...

யாரை எல்லாம் கூட்டணியில் சேர்த்தால் அதனால் ஏற்படும் சாதக, பாதகங்களை தான் அதிமுக தற்போது தீவிரமாக அலசி ஆராய்ந்து வருகிறது.

Anbarasan

அதிமுக-பாஜக கூட்டணி பற்றிய பேச்சுக்கள் தான் கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு விஷயமாக இருந்து வருகிறது. திமுக, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளுடனும் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு கிடையாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. இதற்கு அடுத்த பெரிய கட்சி என்று பார்த்தால் தமிழகத்தில் எதிர்க்கட்சியான அதிமுக தான் உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்றால் பாஜக.,விற்கு இருக்கும் ஒரே சாய்ஸ் அதிமுக.,வுடன் கூட்டணி வைப்பது தான்.

மேலும் படிக்க: இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க.. "மாலை முரசு" வழங்கும் IPL 2025-ன் "Special பரிசை வெல்லுங்க! இது நீங்க எதிர்பார்க்காத வேற லெவல் பரிசுங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!

கூட்டணிக்கு காத்திருப்பது யார்?

தங்களுடன் கூட்டணி வைக்க பலரும் தவம் கிடப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கெத்தாக வெளியில் பேட்டி கொடுத்தாலும், உண்மையில் கூட்டணி அமைத்தால் மட்டுமே தமிழக சட்டசபை தேர்தலில் களம் காண முடியும். அதுவும் பலமான கட்சியுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே அது நடக்கும் என்பது தான் யதார்த்தமான கள நிலவரம். இது பாஜக.,வுக்கும் நன்றாக தெரியும். திமுக கூட்டணியை உடைக்க நினைத்த முயற்சி தோல்வி அடைந்தது. விஜய்யை கூட்டணியில் சேர்க்க நினைத்த முயற்சியும் தவிடு பொடியாகி விட்டது. பாஜக.,வுடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என விஜய் திட்டவட்டமாக சொல்லி விட்டார். அதனால் வேறு வழியே இல்லாமல் சில பல வேலைகளை செய்து, அதிமுக.,வின் கூட்டணிக்காக காத்துக் கொண்டிருக்கிறது பாஜக.

மேலும் படிக்க: அதிமுக-பாஜக கூட்டணி அமைந்தால் முதல்வர் இவர் தான்...இவர் நம்ம லிஸ்டிலையே இல்லையே

பாஜக கூட்டணியை விரும்பாத அதிமுக :

செங்கோட்டையனை வைத்து பாஜக நெருக்கடி கொடுத்தாலும், அக்கட்சியுடன் கூட்டணி வைப்பதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விருப்பம் இல்லை என்பது தான் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிப்பது. காரணம் தமிழகத்தில் பாஜக.,விற்கு எதிரான அலைகள் இருப்பது தான். தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பாஜக.,விற்கு ஆதரவு இருந்தாலும் பெரும்பாலான மாவட்டங்களில், குறிப்பாக வட மாவட்டங்களில் பாஜக.,விற்கு எதிரான நிலை தான் உள்ளது. அதை விட முக்கியமாக இஸ்லாமியர்கள், பாஜக.,விற்கு எதிரான மனநிலையிலேயே உள்ளார்கள். இது கடந்த லோக்சபா தேர்தலிலேயே வெளிப்பட்டது தான் அதிமுக ஒரு சீட் கூட வாங்க முடியாமல் படுதோல்வி அடைந்ததற்கு காரணமாக அமைந்தது. தற்போது மும்மொழி கொள்கை போன்ற விவகாரங்கள் வேறு தீவிரமாகிக் கொண்டிருப்பதால் பாஜக., மீதான வெறுப்பு அதிமுக.,வின் வெற்றியை பாதிக்கும் என எடப்பாடி பழனிச்சாமி நினைக்கிறார்.

மேலும் படிக்க: "அழகு மட்டும் இல்லை, அங்கீகாரமும் கிடைத்தது – முல்லைப் பூவுக்கு புவிசார் குறியீடு!"

அதிமுக.,வின் விருப்பம் என்ன?

மற்றொரு புறம், பாமக மற்றும் விஜய் உடன் கூட்டணி வைப்பதை தான் எடப்பாடி பழனிச்சாமி விரும்புகிறார். காரணம், பாமக.,விற்கு வட மாவட்டங்களில் கணிசமான ஓட்டு வங்கியும், செல்வாக்கும் அதிகம் உள்ளது. அதே போல் விஜய்க்கு தமிழகம் முழுவதும் இளைஞர்களின் ஆதரவு அதிகமாக உள்ளது. இதனால் இவர்கள் இருவருடனும் கூட்டணி வைத்தால் வட மாவட்ட ஓட்டுக்களையும், இளைஞர்கள் ஓட்டுக்களையும் அள்ளி விட்டால் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி விடலாம். இதன் மூலம் திமுக.,விற்கும் கடும் நெருக்கடி கொடுக்க முடியும் என எடப்பாடி பழனிச்சாமி நினைக்கிறார். ஆனால் தனது தலைமையில் தான் கூட்டணி அமைய வேண்டும் என விஜய் கூறி வருவதால் அதை ஏற்றுக் கொள்ள அதிமுக தயங்குவதால் தான் அந்த கூட்டணி முடிவுக்கு வராமல் இழுபறி நிலையிலேயே இருந்து வருகிறது.

அதிமுக.,வின் பிளான் இது தான் :

இன்னொரு புறம் நாம் தமிழர் கட்சியுடனும் கூட்டணி வைக்க எடப்பாடி பழனிச்சாமி விரும்பி வருகிறார். சீமான் கட்சிக்கு தமிழகத்தில் 8 சதவீதம் வரை ஓட்டுக்கள் உள்ளன. இதனால் அந்த ஓட்டுக்களும் அதிமுக.,விற்கு கிடைத்தால் அது கூடுதல் பலமாக இருக்கும் என எடப்பாடி பழனிச்சாமி கருதுகிறார். பாமக, விஜய், நாம் தமிழர் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி வைக்க வேண்டும் என்பது தான் அதிமுக.,வின் பிளான். ஆனால் அதற்குள் விஜய்-சீமான் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு விட்டதால் இவர்கள் இருவரும் ஒரே கூட்டணியில் இருப்பதற்கான வாய்ப்புகளை அது குறைத்து விட்டது. யாரை எல்லாம் கூட்டணியில் சேர்த்தால் அதனால் ஏற்படும் சாதக, பாதகங்களை தான் அதிமுக தற்போது தீவிரமாக அலசி ஆராய்ந்து வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்