அதிமுக-பாஜக கூட்டணி அமைந்தால் முதல்வர் இவர் தான்...இவர் நம்ம லிஸ்டிலையே இல்லையே

இந்த கன்டிஷனுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சம்மதிக்க வைக்கும் முயற்சி?
eps and annamalai
eps and annamalaiAdmin
Published on
Updated on
2 min read

சென்னை : 2026 ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக-பாஜக இடையே கூட்டணி அமைந்தால் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தான் தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக போய் கொண்டிருக்கிறது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு பிரபல நபரின் பெயர் தான் முதல்வர் வேட்பாளருக்கு பரிந்துரைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க: அடுத்த ஓபிஎஸ் ஆகிறாரா செங்கோட்டையன்?...இவரின் பின்னணியில் இருப்பது யார்?

அதிமுக.,விற்காக குருல் கொடுத்த ஓபிஎஸ் :

தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி உருவாகுமா? உருவாகாதா? என்பதை தாண்டி ஒருவழியாக பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, இறுதியாக இரு கட்சிகளும் ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதிமுக-பாஜக கூட்டணி மட்டுமல்ல அதிமுக.,வில் பிளவு பட்டிருக்கும் இரு அணிகளையும் ஒன்ற சேர்க்கும் முயற்சியும் ஏறக்குறைய வெற்றி அடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதன் வெளிப்பாடு தான், சமீபத்தில் சபாநாயருக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ஆவேசமாக குரல் எழுப்பினார்.

மேலும் படிக்க: சிவனும் விஷ்ணுவும் ஒன்றாய் அவதரித்த சங்கரநாராயணன் ஆலயம்

பாஜக.,வின் பிளான் :

அதிமுக பிளவுபட்டு இரு அணிகளாக இருப்பதால் தான் ஓட்டுக்கள் பிரிந்து, அதிமுக தொடர்ந்து இறங்கு முகத்தை சந்தித்து வருவதாகவும், அதோடு கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் பாஜக கருதுகிறதாம். அதனால் தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் அதிமுக இரு அணிகளையும் ஒன்று சேர்க்கும் முயற்சி ஒருபுறம் நடந்து வருகிறதாம். மற்றொரு புறம், தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்ற பாஜக.,வின் நீண்ட நாள் கனவிற்காக வியூகமும் வகுக்கப்பட்டு வருகிறதாம். இதனால் பாஜக.,வின் ஐடியா படி இந்த முறை புதிய நபர் ஒருவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

பாஜக போட்ட கன்டிஷன் :

ஆட்சியில் இருக்க வேண்டும் அல்லது ஆட்சியில் அங்கம் வகிக்க வேண்டும் என்பது தான் பாஜக.,வின் அரசியல் ஃபார்முலாவாக உள்ளது. இதனால் தமிழகத்தில் ஆட்சியில் அங்கம் வகிக்க அதிமுக.,வுடன் கூட்டணி வகிப்பது தான் சரி என்ற முடிவுக்கு பாஜக வந்துள்ளது. அதே சமயம் அதிமுக.,வில் இபிஎஸ்-ஓபிஎஸ் என்ற பிரச்சனை கடந்த சில ஆண்டுகளாகவே ஓடிக் கொண்டிருப்பதால் புதிய முதல்வர் வேட்பாளரை அதிமுக சார்பில் அறிவிக்க பாஜக வலியுறுத்தி வருகிறதாம். அதிமுக-பாஜக கூட்டணி அமைவதற்கு பாஜக போட்டுள்ள முக்கிய கன்டிஷனே அது தானாம். இந்த கன்டிஷனுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சம்மதிக்க வைக்கும் முயற்சி, பேச்சுவார்த்தை தான் தற்போது நடந்து வருகிறதாம். ஒருவேளை இபிஎஸ் இதற்கு ஓகே சொன்னால் பாஜக-அதிமுக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விடுமாம்.

மேலும் படிக்க: செங்கோட்டையனுடன் அதிமுக சமரசப் பேச்சு... இவ்வளவு அரசியல் சீக்ரெட் இருக்கா?

முதல்வர் வேட்பாளர் இவரா?

பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டுள்ள நபர் அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன் என யாரையும் நினைத்து விட வேண்டாம். பாஜக., பரிந்துரைத்துள்ள நபர் வேறு யாரும் அல்ல. அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தானாம். செங்கோட்டையனை தங்கள் பக்கம் வளைக்க பாஜக., கொடுப்பதாக சொன்ன உயர் பதவி இது தானாம். செங்கோட்டையனை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதால் அதிமுக.,விற்கு இரண்டு வகையான லாபம் ஏற்படும் என சொல்லப்படுகிறது. அதாவது, கொங்கு மண்டலத்தில் வாக்குகளை அதிகமாக பெறலாம். மற்றொன்று, அதிமுக.,வில் அடிமட்ட தொண்டன் கூட தலைமை பதவிக்கு வர முடியும் என அக்கட்சியின் தலைவர்கள் அடிக்கடி சொல்வது உண்மையாக்க முடியும். திமுக.,வின் வாரிசு அரசியலுக்கு எதிராக அதிமுக.,வின் பலமான பிரச்சாரமாகவும் இது இருந்து, மக்கள் மனதில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com