தமிழ்நாடு

செங்கல்பட்டில் பாஜக பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கு: நண்பர்கள் கைது..!

Malaimurasu Seithigal TV

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே பாஜக பிரமுகா் கொலை வழக்கில் நண்பா்கள் 4 பேரை போலீசாா் கைது செய்தனா்.

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் ரவுடியை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி கொடூர கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பெருங்களத்தூர், பாரதி நகரில் சரித்திர பதிவேடு குற்றவாளியான வெங்கடேஷ் என்பவரை நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் தலையில் கல்லை போட்டும் , அரிவாளால் வெட்டிக் கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பியோடிய சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பீர்க்கன்காரணை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர், பாரதி நகரில் 'பி' பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளியான வெங்கடேஷ்(எ)பீரி வெங்கடேஷ்(26), என்பவரை நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் தலையில் கல்லை போட்டு தலையை சிதைத்து, அரிவாளால் வெட்டிக் கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பியோடினர்.

அருகில் இருந்த அடையாள அட்டையை வைத்து கொலை செய்யப்பட்டவர் ரவுடி வெங்கடேஷ் என பீர்க்கன்காரணை காவல்துறையினர் உறுதி செய்தனர். இதையடுத்து, கொலை செய்து விட்டு தப்பியோடிய நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இன்னிலையில், பாஜக பிரமுகர்  முகத்தை சிதைத்து வெட்டி கொலை செய்த  வழக்கில் தற்போது, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி,   பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த குணா (வயது-35), முடிச்சூர் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது-22), சந்துரு டாட்டா ஏசி ஓட்டுநர் (வயது-22), அருண் ஆட்டோ ஓட்டுனர் (வயது-24)  ஆகிய நான்கு நபரை கைது செய்து பெருங்களத்தூர் காவல் நிலையம் அழைத்து வந்து நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

மேலும் விசாரணையில்,  ரவுடிசம் வேண்டாம் என நண்பர்களுக்கு அறிவுரை கூறியதால் அதனை ஏற்றுக் கொள்ளாத நண்பர்களே தனது நண்பரை மது அருந்து அழைத்துச் சென்று கொடூரமாக வெட்டி கொலை  செய்ததாக தெரிவித்தனர்.