தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை துவங்கியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் (SIR) இரண்டாம் கட்டத்தை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யும் பணி நவம்பர் நான்காம் தேதி துவங்கியது.
தகுதிவாய்ந்த வாக்காளர்கள் மட்டுமே பட்டியலில் இருப்பதை உறுதிசெய்யவே , வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பு நடத்தப்படுகிறது. இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் அல்லது நகல் உள்ளீடுகள் நீக்கப்படும். இப்போது மொத்தமாக வாக்காளர் பட்டியல் முடக்கப்பட்டு உள்ளது. நீங்கள் அதிகாரிகள் தரும் ஆவணங்களை நிரப்பி கொடுத்தால் மட்டுமே உங்கள் வாக்காளர் லிஸ்ட் உறுதி செய்யப்படும்.
இந்த சூழலில் தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ள புதிய வரைவு வாக்காளர் பட்டியலில் 97.34 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள மொத்தமுள்ள 6.41 கோடி வாக்காளர்களில் 97,37,832 பெயர்கள் நீக்கப்பட்டு, 5.43 கோடி பேர் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு கோடி, இது பீகாரில் நீக்கப்பட்ட வாக்களர்களின் எண்ணிக்கையை விட அதிகம் ஆகும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.