“தீக்குளித்த ஓவிய ஆசிரியரின் மனைவி” - கணவனின் கொடுமை தாங்க முடியாமல் விபரீதம்… விடுமுறை நாளில் திருப்பூரில் நடந்த பரபரப்பு!

இதனை தொடர்ந்து அந்த பெண்ணுக்கு உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்ட நிலைல உடனடியாக அங்கிருந்தவர்கள்...
“தீக்குளித்த ஓவிய ஆசிரியரின் மனைவி” - கணவனின் கொடுமை தாங்க முடியாமல் விபரீதம்… விடுமுறை நாளில் திருப்பூரில் நடந்த பரபரப்பு!
Published on
Updated on
2 min read

திருப்பூர் மாவட்டம், கலெக்டர் அலுவலக வளாக வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஆட்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. கலெக்டர் அலுவலக வராண்டாவில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர். நேற்று மாலை 7 மணி அளவில் பெண் ஒருவர், கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் பஸ்ஸில் இருந்து இறங்கி நேராக கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பாதை வழியாக நடந்து வந்து மனு எழுதிக்கொடுக்கும் இடத்துக்கு அருகே வந்து நின்றிருக்கிறார். பின்னர் திடீரென்று தான் கொண்டு வந்த கேனில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி மாவட்ட ஆட்சியால் வளாகத்திற்குள் தீக்குளித்தார்.

இதில் உடலில் தீ மளமளவென எரிய சத்தம் போட்டபடி கலெக்டர் அலுவலக வாராண்டாவை நோக்கி ஓடி வந்த பெண்ணை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடி வந்து, அவரது உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தார். இதனை தொடர்ந்து அந்த பெண்ணுக்கு உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்ட நிலைல உடனடியாக அங்கிருந்தவர்கள், 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்து அந்த பெண்ணை ஏற்றி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Admin

பின்னர் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வாய்த்த வீரபாண்டி போலீசார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொணடத்தி அந்த பெண் உடுமலை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியில் ஓவியா ஆசிரியராக பணியாற்றி வரும் பிரபாகரன் என்பவரது மனைவி 40 வயதுடைய கவுசல்யா என்பது தெரியவந்தது. மேலும் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையி கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு பிரபாகரன் கவுசல்யாவை கொடுமை செய்து வந்துள்ளார்.

Admin

சம்பவம் நடந்த அன்று வழக்கம் போல் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்ததாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, மனவேதனையில் இருந்த கௌசல்யா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் தீக்குளித்தது தெரியவந்தது. விடுமுறை நாளான நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் குடும்ப பிரச்சனை காரணமாக பெண் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது, மன உளைச்சல் இருந்தால் அழைக்க வேண்டிய எண்-1800-599-0019.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com