தமிழ்நாடு

இந்திய அளவில்.. ஒவ்வொரு மொழிகளிலும் Industry Hit கொடுத்த திரைப்படம் என்னென்ன? தமிழில் உண்மையில் யார் 'கிங்' தெரியுமா?

திரையரங்குகளில் இன்னும் ஹவுஸ்புல் ஷோ என்பதால் தீபாவளிக்குள் 1000 கோடியை தாண்டும் என்று கணிக்கப்படுகிறது.

Muthu Lakshmi

இந்திய சினிமா என்றாலே ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனி மாஸ், தனி ரசிகர் கூட்டம். அந்தந்த மொழிகளில் வெளியாகும் படங்கள் வசூலிலும், ரசிகர்களின் கொண்டாட்டத்திலும் புதிய சாதனைகளைப் படைத்து வருகின்றன. குறிப்பாக, ஒரு திரைப்படம் வெளியாகி Industry Hit என்ற அந்தஸ்தைப் பிடிப்பது சாதாரண விஷயமல்ல.

அந்த வகையில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஒவ்வொரு Industry-யிலும் வசூல் சாதனை படைத்த படங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

பாலிவுட் திரையுலகில் அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் உலக அளவில் 5000க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், இந்தியாவில் மட்டும் 4000க்கு மேற்பட்ட திரையரங்குகளிலும் திரையிடப்பட்டது. இந்தியாவின் டாப் பாக்ஸ் ஆபீஸ் வசூல் அடித்த திரைப்படம் தங்கல். இதுவரை யாரும் அந்த பாக்ஸ் ஆஃபீஸ் சாதனையை முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மல்யுத்த விளையாட்டை மையமாக கொண்டு உருவான தங்கல் திரைப்படம் கடந்த 2016-ம் ஆண்டு இந்தியில் வெளியானது. முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அமீர்கான், சாக்ஷி தன்வார், ஃபாத்திமா சனா ஷேக், சான்யா மல்ஹோத்ரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அமீர்கானின் சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெறும் 70 கோடியில் உருவான தங்கல் திரைப்படம், உலக அளவில் ரூ.2000 கோடியை தாண்டி வசூல் ஈட்டியது. இந்தியாவில் மட்டும் ரூ.600 கோடிக்கு அதிகமான பெற்றதாக கூறப்படுகிறது. 

‘தங்கல்’ வெறுமனே மல்யுத்த போட்டியை மட்டுமே மையமாக கொண்டில்லாமல், சமூகம் குறித்த பல்வேறு கருத்துக்களை பேசியது. ஆண் - பெண் ரீதியான பாலின பாகுபாடுகள் குறித்தும், இரு பாலினத்தவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் தங்கல் அழுத்தமாகப் பேசியிருந்தது. அமீர்கானின் சினிமா பயணத்தில் ‘தங்கல்’ மிக முக்கியமான படமாக அமைந்தது.

பாகுபலி 2

தெலுங்கில் இயக்குனர் ராஜ்மவுலி இயக்கத்தில் 2017 வெளியான 'பாகுபலி 2' திரைப்படம் டோலிவுட் Industry-ல் அதிக வசூல் ஈட்டிய திரைப்படமாகும்.’பாகுபலி’ முதல் பாகத்தை தொடர்ந்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உட்பட பலர் நடித்துள்ளனர். 250 கோடி பட்ஜெட்டில் உருவான 'பாகுபலி 2' உலக அளவில் சுமார் 1,800 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதய அளவில் அதிக வசூல் படைத்த திரைப்படங்களில் தற்போது 3வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கன்னடத்தில் யாஷ் நடிப்பில் வெளியான "கேஜிஎப் 2” திரைப்படம் சாண்டல்வுட் இண்டஸ்ட்ரில் அதிக வசூலை ஈட்டிய படமாகும். 2022 ல் வெளியான "கேஜிஎப் 2” உலகம் முழுவதும் ரூபாய் 1177 கோடி வசூல் ஈட்டியுள்ளது. ஆக்சன் திரில்லர் படமாக வெளியான இந்த திரைப்படம் கர்நாடகாவை கடந்து தென்னிந்தியாவிலும் அதிக வரவேற்பை பெற்றது.

நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு நடிப்பில், கிரிஷ் ஏ.டி. இயக்கியுள்ள வெளியாகி "பெத்லஹேம் குடும்ப யூனிட்" ரூ.330 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது.

ஜெயிலர் 2

கோலிவுட்டை பொறுத்த வரையில் “தலைவரு நிரந்தரம்” என்பது வசூலிலும் பலித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் கூட்டணியில் கடந்த செப்டம்பர் 25 வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த திரைப்படமாக உருவெடுத்துள்ளது.

75 வயதிலும் இந்த சாதனையை ரஜினிகாந்த் மட்டுமே தக்கவைக்க முடியும். தமிழ் சினிமாவில் முதல் ₹100 கோடி வசூல் செய்த படத்தைக் கொடுத்த ரஜினிகாந்த், ‘ஜெயிலர் 2’ படம் மூலம் சுமார் 900 கோடி வசூல் சாதனை கொடுத்துள்ளார். திரையரங்குகளில் இன்னும் ஹவுஸ் புல்-ளாக ஓடுவதால் தீபாவளிக்குள் 1000 கோடியை தாண்டும் என்று கணிக்கப்படுகிறது. இதற்கு முன்பு ரஜினிகாந்தின் "2.0" படம் அதிக வசூல் என்ற சாதனை படைத்தது. அதை ரஜினிகாந்தே முறியடித்துள்ளார். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்