gautami  
தமிழ்நாடு

“மீண்டும் ராஜபாளையத்திற்கு அடிப்போடும் கவுதமி” - சாதிவாரியான ஓட்டுக்களை குறி வைக்கிறார்? கடுப்பில் ராஜேந்திர பாலாஜி!

இத்துணை மாதங்கள் அயராது உழைத்தும் பாஜக தலைமை தனக்கு சீட்டு தரவில்லையே என்ற ஆதங்கத்தில்தான் கவுதமி பாஜக-வை விட்டு விலகநேர்ந்தது ...

Saleth stephi graph

தொண்ணூறுகளின் இறுதியில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை கவுதமி. இவர் நடிகர் கமல் ஹாசனை காதலித்து அவரோடு சிலகாலம் வாழ்ந்து வந்தார். பிறகு அவரை விட்டு பிரிந்து தனியாக வந்தார். அப்போதுதான் பாஜக-வில் சேர்ந்து தீவிரமாக பணியாற்றினார். நடிகை கவுதமியை 2021 தேர்தலில் ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளராக பாஜக அறிவித்தது. அதற்காக தேர்தலுக்கு ஒரு வருடம் முன்பு ராஜபாளையத்தில் வீடு எடுத்து குடியேறிய கவுதமி, அங்கேயே தங்கி இருந்து களப்பணியில் கவனம் செலுத்தினார்.  2021 சட்டமன்ற தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடும் திட்டத்தில் இருந்தார். ஆனால் அப்போது, அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜிக்கு ராஜபாளையம் தொகுதி தரப்பட்டது. இத்துணை மாதங்கள் அயராது உழைத்தும்  பாஜக தலைமை தனக்கு சீட்டு தரவில்லையே என்ற ஆதங்கத்தில்தான் கவுதமி  பாஜக-வை விட்டு விலகநேர்ந்தது எனவும் சொல்லப்படுகிறது. தன் பிறகு பாஜக -விலிருந்து விலகிய நடிகை கவுதமி அதிமுக-வில் இணைந்தார். அதிமுக-வில் கொள்கை பரப்பு செயலாளராக பதவி ஏற்றார்.

2021 தேர்தலில் விட்ட ராஜபாளையம் தொகுதியை தற்போது மீண்டும் பிடிக்க எண்ணியுள்ளார் கவுதமி.

 “ஆந்திராவை பூர்விகமாக கொண்ட கவுதமி,  ராஜூக்கள் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விரும்பினார். அதனாலேயே அவரை ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளராக பாஜக நியமித்தது. கவுதமியும் ராஜூக்கள் சமூகத்து மக்களைச் சந்தித்துப் பேசி தனக்கான ஆதரவை திரட்டி வைத்திருந்தார். இத்தனை முன்னேற்பாடுகளை செய்து வைத்திருந்த நிலையில் தேர்தலில் வாய்ப்புக் கிடைக்காமல் போனதில் அவருக்கு பெரிய வருத்தமுண்டு.

அந்த வருத்தத்தைப் போக்கிக் கொள்ளவே அதிமுக-வில் இப்போது ராஜபாளையம் தொகுதிக்காக பேசி வருகிறார்.” என அவரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இதில் ராஜேந்திர பாலாஜிக்கு விருப்பம் இல்லை எனத்தெரிகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.