தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மொத்த பால் கொள்முதல் 31 லட்சம் லிட்டரை கடந்துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மொத்த பால் கொள்முதல் 31 லட்சம் லிட்டரை கடந்துள்ளது.பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
விவசாயிகளிடம் இருந்து நாள்தோறும் சராசரியாக 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, பின்னர் பதப்படுத்தப்பட்டு மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வேலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்படும் நிலையில் கூடுதலாக ஒருலட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக பால் வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ” பாஜக 400 தொகுதிகளில் வெற்றி பெறும் “ - எல்.முருகன்