anwar raja 
தமிழ்நாடு

“ எடப்படியார் யார் பேச்சையும் கேட்கவில்லை!!” பாஜக ஒரு Negative Force!! அதிமுக -விலிருந்து திமுக -விற்கு தாவிய அன்வர் ராஜா பகீர்!!

அன்வர் ராஜா அறிவாலயம் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். அன்வார் ராஜா அறிவாலயம் சென்ற உடனேயே...

Saleth stephi graph

2026 தேர்தல்உண்மையில் இன்னும் 10 மாதங்களுக்கு தமிழ் நாடு அல்லோலப்படும் என்பதில் ஐயமில்லை. “எதிரிக்கு எதிரி நண்பன்" என்பது போல விஜயுடன் கூட்டணி வைக்கவே எடப்பாடி விரும்பினார். ஆனால் விஜய் இதற்கு இசைந்து கொடுப்பதாக தெரியவில்லை எனவே வேறு வழி இல்லாமல் பாஜக -வுடன் கூட்டணி வைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அதிமுக கூட்டணிக்கான விலைதான்  “அண்ணாமலை பதவி விலகளுக்கு” காரணம் என்றும் கூறப்பட்டது. ஆனாலும் எதுவுமே இல்லாத பாஜக -விற்கு அதிமுக -வின் கூட்டணி கிடைத்ததே பெரும் லாபம் தான்.  ஆனால் அதிமுக விற்கு அது பேரழிவு என்கின்றனர் ஆர்வலர் பலர்.

ஏற்கனவே அதிமுக- பாஜக கூட்டணியை மக்கள் விரும்பவில்லை என்று சொல்லி  வந்த நிலையில் தற்போது அதிமுக -வின் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அறிவாலயம் சென்று இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். அன்வார் ராஜ அறிவாலயம் சென்ற உடனேயே அவரை கட்சியிலிருந்து நீக்கினார் எடப்பாடி.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அன்வர் ராஜா, “கருதியில் ரீதியாக நாங்கள் வாழ்ந்தவர்கள். அண்ணாவிற்கு புறம்பாகவே அதிமுக தற்போது  செயல்பட்டு வருகிறது. மேலும் பாஜக -வின் கையில் சிக்கி அந்த கட்சி தற்போது தத்தளித்து வருகிறது. இது கூட்டணியே கிடையாது. ஏற்கனவே பலமுடை மைதிஷா மிக தெளிவாக கூறிவிட்டார். பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியே அமையும் என்று. ஒரு இடத்தில்கூட அண்ணன் எடப்பாடியின்  பெயரை அவர் எங்குமே குறிப்பிடவில்லை. அதிமுக -வின் மூத்த முன்னாள் அமைச்சர் பலர் எடப்பாடியுடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் அவர் யார் பேச்சையும் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் இந்த கூட்டணியை விரும்பவில்லை. உத்தவ் தாக்ரே முதல் மமதா பேனர்ஜி வரை  எங்கெல்லாம் பாஜக -வின் கால் படுகிறதோ அங்கெல்லாம் அழிவுதான். பாஜக ஒரு Negative Force. கட்சியை காப்பாற்ற எவ்வளவோ சொல்லி பேசி பார்த்தேன். ஆனால் அவர் பேச்சை கேட்கவே இல்லை. அதனால் எனது அடுத்த தேர்வான திமுக -உடன் இணைத்துவிட்டேன். அடுத்த தேர்தலிலும் மு.க.ஸ்டாலின்தான் முதல்வராவர்” என பேசியிருக்கிறார்.

தொடர்ந்து பாஜக அதிமுக கூட்டனில் பலவீனப்பட்டு வருகிறது. இனி என்ன செய்ய போகிறார் எடப்பாடி என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.