NDA ALLAINCE  
தமிழ்நாடு

170 தொகுதிகளில் களம் காண்கிறது அதிமுக..! ஓபிஎஸ் -க்கு 3 … பாமக சேர்ந்தால் எவ்வளவு தெரியுமா!?

பட்டியலை பார்த்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இது தொடர்பாக மூத்த நிர்வாகிகள் மற்றும்....

மாலை முரசு செய்தி குழு

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று சென்னை வந்தடைந்தார். இவர்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி சென்னையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் அதிமுக 170 தொகுதிகளில் களம் காணும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாஜகவுக்கு 25 தொகுதிகளும், ஒருவேளை பாமக தேசிய ஜநாயக கூட்டணியில் இணைந்தால் பாமகவுக்கு 21 தொகுதிகளிலும் தேமுதிகவுக்கு 6 தொகுதி மற்றும் 1 ராஜ்யசபா, அமமுகவுக்கு 6 தொகுதிகளும், ஓபிஎஸ் அணிக்கு 3 தொகுதிகளும் புதிய தமிழகம், ஜான்பாண்டியன், புதிய நீதி கட்சி ஏ.சி. சண்முகத்துக்கு தலா 1 தொகுதியும் வழங்கப்படும்  என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பட்டியலை பியூஸ் கோயிலிடம் எடப்பாடி பழனிச்சாமி வழங்கியதாகவும்  கூறப்படுகிறது. 

பட்டியலை பார்த்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இது தொடர்பாக மூத்த நிர்வாகிகள் மற்றும் அகில இந்திய தலைமையுடன் பேசிவிட்டு கூறுவதாக தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் தான் சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மத்திய அமைச்சர் தமிழக பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த சூழலில் பாமக அன்புமணி, ராமதாஸ் என இருகூறுகளாக பிளவுபட்டு நிற்கக்கூடிய இந்த சூழலில் அதிமுக -வில் இணைந்தால் தொகுதிகள் அன்புமணி தலைமைக்கா, ராமதாஸ் தலைமைக்கா என்ற பெரும் கேள்வி தற்போது எழுந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.