முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் புதிதாக 23 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையில் அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்நிலையில் மீண்டும் வந்தே மாதரம் பாடலுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 23 அமைச்சர்களில் 2 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது
தமிழக அமைச்சரவையில் 59 வருடங்களுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ளது. இதற்காக ராஜேஸ்குமார் மற்றும் விஸ்வநாத் ஆகியோரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கு உயர்கல்வி மற்றும் சுற்றுலா ஆகிய இரண்டு இலாகாக்கள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, அறை நூற்றாண்டு காலத்திற்கு முன்பாக ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் மீண்டும் இப்போது தான் தமிழக அமைச்சரவையில் இடம் பெறுகிறது.
இதற்கு முன் மே 16 ம் தேதி தவெகவில் இருந்து 9 அமைச்சர்களை பதவி ஏற்றுக்கொண்டனர். 5 மாவட்டங்களில் இருந்து மட்டும் 18 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர், சென்னையில் மட்டும் 7 அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுவரை அமைச்சரவையில் 4 பெண்கள் இடம் பெற்றுள்ளன, மேலும் விஜய் மக்கள் மன்றத்தில் இருந்து 16 பேருக்கு அமைச்சரவை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதையடுத்து பட்டியலினத்தை சேர்ந்த 7 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
அதிமுக சி.வி சண்முகம் தரப்பில் இருந்து ஒருவர் கூட இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. இந்த பதவியேற்பு நிகழ்வில் சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன், சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர். இன்று பதவி ஏற்றுக்கொண்ட 23 அமைச்சர்களின் பட்டியல் கீழ்வருமாறு
1. தூத்துக்குடி - ஸ்ரீநாத்
2. அவினாசி - S.கமலி
3. குமாரபாளையம் - விஜயலட்சுமி
4. காஞ்சிபுரம் - R.V. ரஞ்சித்குமார்
5. கும்பகோணம் - வினோத்
6. திருவாடானை - ராஜீவ்
7. கடலூர் - ராஜ்குமார்
8. அரக்கோணம் -காந்திராஜ்
9. ஒட்டப்பிடாரம் - மதன் ராஜா
10. ராஜபாளையம் - ஜெகதீஸ்வரி
11. கிள்ளியூர் - ராஜேஷ் குமார்
12. ஈரோடு கிழக்கு - விஜய் பாலாஜி
13. ராசிபுரம் - லோகேஷ் தமிழ்செல்வன்
14. சேலம் தெற்கு - விஜய் தமிழன் பார்த்திபன்
15. ஸ்ரீரங்கம் - ரமேஷ்
16. மேலூர் - விஸ்வநாதன்
17. வேளச்சேரி - R.குமார்
18. ஸ்ரீபெரும்புதூர் - K.தென்னரசு
19. கோவை வடக்கு - சம்பத் குமார்
20. அறந்தாங்கி - முகமது பர்வேஸ்
21. தாம்பரம் - சரத்குமார்
22. ஆர்.கே.நகர் - மரிய வில்சன்
23. கிணத்துக்கடவு - விக்னேஷ்
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.