உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள மாநில நிதி ஆணையத்தின் கீழ் 752 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளின் மானியம்:
தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்காக அடிப்படை மானியமாக மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரையின் படி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பு ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 ஆயிரத்து 80 கோடி ரூபாயில் ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு மட்டும் 752 கோடி ரூபாய் நிதி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணையில் வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க: https://www.malaimurasu.com/posts/cover-story/EPS-Case--Adjournment-of-judgment-without-date
அரசாணை:
இந்த நிதியானது உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணையில் அறிவித்துள்ளது. மேலும், இந்த நிதி மூலம் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளில் பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான தடையற்ற குடிநீர், மழைநீர் சேகரிப்புத் திட்டங்கள், கழிவறைகள் கட்டுதல், நூலகங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.