மதுரை; கீழடி அகழ்வாய்வையும் அதன் தொன்மங்களையும் குறித்து ஆராய்ச்சியாளர் அமர்நாத் கிருஷ்ணன் தலைமையிலான குழுவின் அறிக்கையை “திருப்திகரமானதாக இல்லை” எனக்கூறி ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. அதுமட்டுமின்றி அமர்நாத்தை நொய்டாவுக்கு இடம் மாற்றியுள்ளது அப்பட்டமான சதி என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் அமர்நாத்தின் அறிக்கையை வெளியிடாமல் திருப்பி அனுப்பிய ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திமுக சார்பில் கீழடியில் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பலபேர் கலந்துகொள்வர் எனத்தெரிகிறது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது கருத்தினை பதிவிட்டுள்ளார். “எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம்!
இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை!
நாளை மதுரை வீரகனூரில், திமுக மாணவர் அமைப்பு நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி ஒன்றிய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம்! அவர்களைத் திருத்துவோம்! என பதிவிட்டுள்ளார்.
நேற்று அமர்நாத் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் இன்று நடைபெறப்போகும் இந்த ஆர்ப்ட்டம் மக்கள் மத்தியில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிக்கின்றனர் விமர்சகர்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.