anbumani discussed internal issues with ramadoss 
தமிழ்நாடு

“ஆட்டத்தை தொடங்கிய ஆடிட்டர் குருமூர்த்தி..” ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு..! அதிமுக-பாஜக கூட்டணியில் இணைகிறதா பாமக!?

நேற்றைய தினம் 'துக்ளக்' பத்திரிகையில் பாமக - பாஜக கூட்டணி குறித்து ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது, அதில்...

Saleth stephi graph

தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவர் ராமதாஸை அவரது மகனும் அக்கட்சியின் தலைவருமான அன்புமணி சந்தித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் மோதல் வலுத்து வருகிறது. சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை கூட்டி, “அன்புமணியை எம்.பி ஆக்கி பெரும் தவறிழைவிட்டேன். அவர் முகுந்தன் நியமன விவகாரத்தில் தன் தாயையே பாட்டிலை தூக்கி அடிக்க சென்றவர். பாஜக கூட்டணி விவகாரத்தில் “அன்புமணியும் அவர் மனைவியும் என் காலைப் பிடித்துக்கொண்டு கதறி அழுதனர்” என பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்” என பரபரப்பு குற்றச்சாட்டை சொல்லியிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை, அன்புமணி சந்தித்துள்ளார். இதனால் இவர்களுக்கு இடையில் இருந்து வந்த மோதல் தற்போது விலகலாம்  என தொண்டர்கள் எதிர்பார்கின்றனர்.சுமார் 45 நிமிடம் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் அன்புமணி மகள் சாஞ்சுத்ராவும் பங்கேற்றுள்ளார்.

குருமூர்த்தி சந்திப்பு..

அதன் பிறகு ஆடிட்டர் குருமூர்த்தியும், அதிமுக -வின் செய்தி துறை சாமியும் சென்று ராமதாஸை சந்தித்துள்ளனர்.

கட்சி பிளவை சரி செய்து அதிமுக-பாஜக-பாமக கூட்டணியை உருவாக்கவே இந்த பேச்சு வார்த்தை நடந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் நேற்றைய தினம் துக்ளக் பத்திரிகையில் பாமக - பாஜக கூட்டணி குறித்து ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது, அதில் NDA கூட்டணியோடு பாமக இணையவிட்டால் அது இருதரப்பிலும் சேதத்தை ஏற்படுத்தும் குறிப்பிடப்பட்டிருந்தது, அதன் பேரிலே இன்று இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்தில் துக்ளக் இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குரு​மூர்த்தி, “அடுத்த ஆண்டு தேர்தலில்  திமுகவை தோற்​கடிக்க பாஜக​வும், அதிமுக​வும் சேர வேண்​டும் என்ப​தில் சந்தேகம் இல்லை. ஆனால், பழனிசாமி போன்ற ஒரு தலைவரை வைத்து கொண்டு இந்த இணைப்பை எப்படி ஏற்படுத்துவது என்பது புரிய​வில்லை. திமுகவை தோற்​கடிக்க வேண்​டும் என்ற உறுதி பழனிசாமி​யிடம் இல்லை” என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இதில் பாமகவை இணைப்பதன் மூலம் இது எடப்பாடியின் வியூகம் அல்ல அமிட்ஷாவின்வியூகம் என புரிந்துகொள்ளலாம். 

யாருக்கு பின்னடைவு!

வடதமிழக்தில் பலமான கூட்டணியாக பாமக-அதிமுக உள்ளது. ஒரு வேளை இந்த தேர்தலில் NDA -கூட்டணியோடு பாமக இணைந்தால், அது பாஜக -விற்குத்தான் நன்மை பயக்கும். ஏற்கனவே தமிழக தேர்தல் களம் மும்முனை போட்டியை எதிர்நோக்கி உள்ளது. ஆனால் தேர்தல் நெருங்க நெருங்க களம் மாறிக்கொண்டே இருக்கிறது, இந்த தேர்தல் நாம் யாரும் எதிர்பார்க்காத தனித்துவமான தேர்தலாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்