தமிழ்நாடு

“அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க முடிவு” - நிரந்தர தலைவர் நான் தான் ராமதாஸ் பரபரப்பு.. மகன் மீது நடவடிக்கை எடுக்க ஒழுங்கு குழு!

தொலைக்காட்சியை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ராமதாஸ் குறித்த செய்திகளை வெளியிடாமல் தடுத்தது,

Mahalakshmi Somasundaram

பாமகவில் தந்தை மகன் இடையேயான மோதல் நடைபெற்று வரும் நிலையில் இன்று  ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தனி ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.  அந்த குழுவிற்கு அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சில காரணங்களை ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழு பரிந்துரை செய்துள்ளது. 

அதில் “கட்சியின் நிறுவனர் அனுமதியின்றி பொதுக்குழு கூட்டியது, தனியான இருக்கை போட்டு ராமதாஸ் அவர்களுக்கு கடவுள் நல்ல புத்தி கொடுக்க வேண்டும்  என வேண்டியது, மக்கள் தொலைக்காட்சியை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ராமதாஸ் குறித்த செய்திகளை வெளியிடாமல் தடுத்தது, கற்பூரம் ஊதுபத்தி ஏற்றி ராமதாஸை அவமானப்படுத்தியது, குலசாமி என சொல்லிக் கொண்டு அவர் மீது தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வந்தது” என பல குற்றசாட்டுகளை ஒழுங்கு குழுவிற்கு பரிந்துரைத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.