annamalai alleges dmk government 
தமிழ்நாடு

“ஞானசேகரனுக்கு அடுத்த ஆப்பு” இன்னும் 48 மணிநேரத்தில்.. திமுக -விற்கு கெடு வைத்த அண்ணாமலை!

டிச.24-ம் தேதி 2 காவல் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மாணவியிடம் எஃப்ஐஆர் வேண்டாம், உன் வாழ்க்கை கெட்டுவிடும் என பேசியிருக்கிறார்கள்...

Saleth stephi graph

அண்ணா பல்கலைக்கழக மாணவி கடந்த டிசம்பர் 23 -பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் நாட்டையே உலுக்கியது. இதில் முதல் மற்றும் ஒரே குற்றவாளியான ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் மூல கேள்வியாக இருந்து வந்த “யார் அந்த சார்?” என்ற கேள்விக்கு நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. மீண்டும் அந்த கேள்வியை எழுப்பினால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என அரசுத்தரப்பு வழக்கறிஞரும் கூறியிருந்தார். இந்நிலையில்தான், பாஜக -வின் அண்ணாமலை காணொளி ஒன்றை வெளியிட்டு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அந்த கனலோயில் அவர் பேசியிருப்பதாவது,

“அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தாக்குதல் வழக்கில், திமுக நிர்வாகி ஞானசேகரனுக்கு, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது.  ஆனால் இந்த வழக்கில் தீர்க்கப்படாத மர்மங்கள் இன்னும் உள்ளன. 24 -ஆம் தேதி இந்த ஞானசேகரனை காவல்துறை கைது செய்கின்றனர், ஆனால் அவர் உடனடியாக வெளியில் விடப்படுகிறார். மீண்டும் 25 -ஆம் சாயங்காலம் தேதி ஞானசேகரன் கைது செய்யப்படுகிறார். ஏன் விட்டார்? இதில் யார் யாரேலாம் சம்பந்தப்பட்டுள்ளனர், ஆதாரங்களை அழித்திருப்பதற்கான சாத்தியங்கள் என்னவெல்லாம் உள்ளது? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.”

அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியிருக்கிறார், சம்பவத்தன்று இரவு ஞானசேகரனின் மொபைல் Flight Mode -ல் இருந்தது என்று, CDR -ம் அதையே சொல்கிறது.  Flight Mode -ல் இருந்து ஆன் செய்யப்பட்ட பின்னர் முதல் போன் கால் ஒரு காவல்துறை அதிகாரிக்கு சென்றுள்ளது, அந்த குறிப்பிட்ட காவல்துறை அதிகாரியோட பெயரையும், போன் நம்பரையும் தற்போது நான் வெளியிடவில்லை 48 மணிநேரம் கழித்து அரசு தரப்பில் இருந்து என்ன பதில்  வருகிறது,  என்பதை பார்த்தபின்னர் நான் வெளியிடுகிறேன். “அன்றைய தினம் திமுக வட்ட செயலாளர் கோட்டூர் சண்முகத்திடம், ஞானசேகரன் செல்போனில் 6 முறை பேசி உள்ளார். அதன்பிறகு, சண்முகமும், அமைச்சர் மா.சுப்பிரமணியனும் பேசுகிறார்கள். அதைத்தொடர்ந்து, இன்னொரு காவல்துறை உயர் அதிகாரியிடம் கோட்டூர் சண்முகம் பேசுகிறார். குற்றமிழைத்த நபர் காவல்துறை அதிகாரிக்கு போன் செய்யவேண்டிய அவசியம் என்ன? இதுகுறித்து குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதா? உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலானய்வு குழு அளித்த 11 பிரிவு குற்றங்களில் ஒன்று “ஆதாரத்தை அழித்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி என்ன ஆதாரத்தை அவர்கள் அழித்தார்கள்.? மே மாதம் 14 -ஆம் தேதிதான் மற்றுமொரு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் மீது   FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதுகுறித்து நம்மிடம் தெரிவிக்கப்படவில்லை. அது என்ன நிலை என்று கூட நம்மிடம் அறிவிக்கப்படவில்லை. யாரை காப்பாற்றுவதற்கு இவர்கள் இவ்வளவு பதற்றம் அடைந்திருக்கிறார்கள்? டிச.24-ம் தேதி 2 காவல் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மாணவியிடம் எஃப்ஐஆர் வேண்டாம், உன் வாழ்க்கை கெட்டுவிடும் என பேசியிருக்கிறார்கள். எனவே, கோட்டூர் சண்முகம், இவரிடம் பேசிய காவல்துறை அதிகாரிகள், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் விசாரிக்கப்பட வேண்டியவர்கள்” என அண்ணாமலை கூறியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்