தமிழ்நாடு

அண்ணாமலை வெளியிட்ட சொத்து விபரம் ..... ராக்கெட் என்று பார்த்தால் புஸ்வானம் ஆகிவிட்டது ..!

Malaimurasu Seithigal TV

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர். இந்நிலையில் சென்னை ஒருங்கிணைந்த மாவட்டங்கள் சார்பில், காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட காங்கிரஸ் கட்சியினர் அங்குள்ள அழகு முத்துக்கோன் சிலை அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த ஆர்பட்டத்தை தலைமை ஏற்று தொடங்கி வைத்து பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி கூறுகையில்,

 "இது ஒரு அறப்போராட்டம், ஒத்துழையாமை இயக்கம், சத்தியாகிரகம் போல் தான் இந்த போராட்டம் நடக்க வேண்டும். ரயிலை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் நம் தோழர்களுக்கு வர கூடாது என்றும், காவல் துறையினர் தரும் எல்லை வரை தான் செயல்பட வேண்டும்' எனக் கூறினார்.

மேலும் , இந்த நாட்டில் ஜனநாயகத்திற்கு எதிரான செயலை செய்ய முயற்சி செய்கிறார்கள். இன்று எதிர்கட்சிகள் இடையே ஒற்றுமை ஏற்பட்டு உள்ளது. காங்கிரஸ் தலைமையில் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளது என்றார்.

தந்தை பெரியார் வசதியானவர் , அண்ணா வசதி இல்லாதவர்...

தொடர்ந்து பேசிய அவர், "பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ள சொத்து விவரம் ராக்கெட் என்று பார்த்தால் புஸ்வானம் ஆகிவிட்டது. பொய்யாக கணக்கு சொல்கிறார். தந்தை பெரியார் வசதியானவர், அண்ணா வசதி இல்லாதவர் இருவரும் அரசியலில் இருந்தார்கள். அரசியலில் இருப்பவர்கள் வசதியாகவும் இருக்கலாம், வசதியற்றவராகவும் இருக்கலாம். அண்ணாமலை தவறாகவே கணக்கு போடுகிறார்",  என்றார்.


..