தமிழ்நாடு

"2026ல் எய்ம்ஸ் மருத்துவமனை பயன்பாட்டுக்கு வரும்" அண்ணாமலை உறுதி!

Malaimurasu Seithigal TV

2026 ஆம் ஆண்டு மே மாதம் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுமையாக  மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் 20 ஆவது நாள் என் மண் என் மக்கள் யாத்திரை மேற்கொண்டார். கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் முன்பு தொடங்கிய யாத்திரை பாபநாசம் சாலை வழியாக அம்பாசமுத்திரம் பேருந்து நிலையம், பூக்கடை பஜார் வழியாக சென்று கல்யாணி திரையரங்கம் முன்பு நிறைவு செய்தார். 

அப்போது பேசிய அண்ணாமலை, 1999 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது கூலி உயர்வு கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் 17 அட்டவணைப் பிரிவினர் கொல்லப்பட்டதாக கூறினார். அவர்களின் கோரிக்கைக்ள மிக எளிய கோரிக்கைகள் தான் என குறிப்பிட்ட அவர் மாஞ்சோலை படுகொலையை செய்தாலும் அதை வைத்தும் திமுக அரசியல் செய்து வருவதாக சாடினார். 

தொடர்ந்து பேசிய அவர், உலக அளவில் பொருளாதாரத்தில் 11 ஆவது இடத்தில் இருந்த இந்தியாவை பிரதமர் மோடி ஐந்தாவது இடத்திற்கு முன்னேற்றியுள்ளதாகவும் அதேநேரத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் சாராயம்  குடிப்பதில் முதல் மாநிலமாக  தமிழ்நாட்டை மாற்றியுள்ளதாகவும் விமர்சித்தார்.