who is tamilnadu bjp new leader Admin
தமிழ்நாடு

தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டால்...பாஜக.,வின் நிலை என்ன ஆகும்?

ஒருவேளை அப்படி நடந்தால் தமிழக பாஜக.,வின் அடுத்த தலைவராக யாரை நியமித்தால் பாஜக.,விற்கு பலன் உண்டு?

Anbarasan

சென்னை : தமிழக பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகப் போவதாகவும், நீக்கப்பட உள்ளதாகவும் இரு வேறு விதமான தகவல்கள் கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் களத்தில் உலா வந்து கொண்டிருந்தது. ஒருவேளை அப்படி நடந்தால் தமிழக பாஜக.,வின் அடுத்த தலைவராக யாரை நியமித்தால் பாஜக.,விற்கு பலன் உண்டு?

அண்ணாமலை பதவி விலகுகிறாரா?

தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலக உள்ளதாக ஒரு புறம் சொல்லப்படுகிறது. ஆனால் உண்மை அது கிடையாது. பாஜக கட்சி விதிகளின் படி, மாநில தலைவர் பதவியின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் மட்டுமே. அதற்கு மேல் அவர் தலைவர் பதவியில் நீட்டிக்க வேண்டும் என்றால் கட்சியின் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பை வைத்து, கட்சி தலைமை விரும்பினால் பதவிக்காலத்தை மேலும் 2 அல்லது 3 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்று ஏற்கனவே 3 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இப்போது கட்சியின் விதிகளின் படி புதிய தலைவரை நியமிக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. ஆனால் தமிழக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு அவரது அதிரடியான செயல்பாடுகளால் கட்சியின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக இளைஞர்களிடம் அண்ணாமலையின் செயல்பாடு கவனத்தை பாஜக பக்கம் ஈர்த்துள்ளது.

புதிய தலைவர் யார்?

இதனால் அண்ணாமலையின் பதவிக் காலத்தை மேலும் நீட்டி கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் தலைவர் பதவியில் இருந்தது போதும் என்றும், சாதாரணமாக தொண்டனாக மட்டுமே இருக்கலாம் என்றும் அண்ணாமலை முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கும் மனநிலைக்கு அவரே வந்து விட்டார் என்பது சமீப நாட்களாக அவர் அளித்து வரும் பேட்டிகளில் இருந்தே தெரிகிறது. மற்றொரு புறம் அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதாவது அதிமுக உடன் கூட்டணி அமைப்பதற்கு பெரும் தடையாக அண்ணாமலையும், அவரது பேச்சுக்களும் தான் காரணம் என பாஜக தலைமை நினைக்கிறதாம். அதிமுக.,வுடன் கூட்டணி அமைக்கும் முடிவில் பாஜக தீவிரமாக இருப்பதால் தான் அண்ணாமலையை மாற்றி விட்டு வேறு ஒருவரை தலைவராக நியமிக்க பாஜக நினைக்கிறதாம்.

முன்னணியில் இருப்பவர் இவர் தான்...

ஒருவேளை அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் கண்டிப்பாக அது நிச்சயம் பாஜக.,விற்கு ஒரு பின்னடைவாக இருக்கும். அப்படி அவர் நீக்கப்பட்டால் தமிழகத்தின் புதிய மாநில தலைவர் பதவிக்கு பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நையினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தர்ராஜன் ஆகியோரின் பெயர்கள் சொல்லப்பட்டு வருகிறதாம். ஆனால் இந்த போட்டியில் முன்னணியில் இருப்பது நையினார் நாகேந்திரன் தானாம். இதற்கு பின்னாலும் பாஜக.,வின் மெகா பிளான் ஒன்று உள்ளதாம். அதாவது, சமுதாய ஓட்டுக்களை கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டி வருகிறதாம். நாடார் ஓட்டுக்களை பெறுவதற்காக ஏற்கனவே பொன் ராதாகிருஷ்ணனை மாநில தலைவர் ஆக்கியது. இதனால் கன்னியாக்குமரி மாவட்டத்திலும் சரி, நாடார் சமுதாய ஓட்டுக்களிலும் சரி பாஜக கொஞ்சம் பலமாக உள்ளது. ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும், பாஜக.,வால் தென் மாநிலங்களில் உள்ள முக்குலத்தோர் ஓட்டுக்களை பெற முடியவில்லை.

இவரை தலைவராக்க காரணம் :

முக்குலத்தோர் ஓட்டுக்களை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக தான் ஓபிஎஸ்.,ஐ கைக்குள் வைத்துள்ளதாம். அதே போல் சசிகலா, தினகரனையும் விடாமல் பிடித்து வைத்துள்ளதாம். தற்போது முக்குலத்தோர் ஓட்டுக்களை அள்ளுவதற்காக தான் நயினார் நாகேந்திரனை தலைவராக்க பாஜக நினைக்கிறதாம். அதே சமயம் கொங்கு மண்டலத்தில் இருந்து ஒருவரை தலைவராக்க நினைத்தால் வானதி சீனிவாசனை மாநில தலைவராகவும் நியமிக்க வாய்ப்புள்ளது. ஆனால் அவருக்கு அந்த அளவிற்கு வாய்ஸ் கிடையாது. தமிழிசை செளந்தர்ராஜனுக்கு கட்சிக்குள் நிறைய எதிர்ப்பு உள்ளஆ. அதனால் பாஜக.,விற்கு இருக்கும் ஒரே சாய்ஸ் ஒன்று அண்ணாமலை பதவிக்காலத்தை நீட்டிப்பது. அப்படி இல்லை என்றால் நயினார் நாகேந்திரனை தலைவராக நியமிக்கப்பது மட்டும் தான்.

இந்த இரண்டில் ஒன்று நடந்தால் மட்டுமே பாஜக., நினைப்பது போல் தமிழகத்தில் வேரூன்ற முடியும். அப்படி ஒருவேளை நயினார் நாகேந்திரன் தலைவர் ஆக்கப்பட்டால், எல்.முருகனைப் போல் அண்ணாமலைக்கும், மத்தியில் ஒரு பதவியை கொடுக்க வாய்ப்புள்ளது, அதே சமயம், தமிழகத்தில் தேர்தல் பொறுப்பாளராகவும் அவரை நியமிக்க, தமிழக தலைவரை பின் இருந்து இயக்கும் பவர் கொடுக்கப்படலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்