அதானி முதல் ஆந்திரா ரெட்டி கேங் வரை.. "இளைஞர்கள் மன்னிக்க மாட்டார்கள் CM sir" - விஜயிடம் கடுகடு கேள்வி எழுப்பிய அப்பாவு! AI Generated
தமிழ்நாடு

அதானி முதல் ஆந்திரா ரெட்டி கேங் வரை.. "இளைஞர்கள் மன்னிக்க மாட்டார்கள் CM sir" - விஜயிடம் கடுகடு கேள்வி எழுப்பிய அப்பாவு!

நேற்று அப்பாவு மின்சாரத்துறையில் ரூ. 2000 கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டியிருந்த நிலையில் இன்று "மின் வாரியத்தை அடிமாட்டு விலைக்கு கொடுக்க துணிந்து விட்டீர்களா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Antony Ajay R

தமிழக முதலமைச்சர் விஜய், மறைந்த சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் உடலை தூக்கி சென்ற சம்பவம் அரசியல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. குறிப்பாக வி.எஸ். பாபு மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.

இந்த நிலையில் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளார் முன்னாள் சபாநாயகர் அப்பாவு.

இதுகுறித்த அவரது சமூக வலைத்தள பதிவில், "மறைந்த #கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் VS பாபு அவர்கள் மறைவிற்கு சென்று அவரது உடலை இடைத்தேர்தல் ஓட்டிற்காக தோளில் சுமந்து சென்ற முதல்வரே !

சென்னையில் உங்கள் வீட்டின் அருகே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 9 ஏழை #மீனவர்கள் இறந்ததற்கு செல்லாமல் அதே நாள் ஆந்திர செல்வந்தர் ரெட்டி குடும்ப திருமண விழாவிற்கு #தோழியோடு சென்று தொழிலதிபர் #அதானியை சந்தித்து தமிழ்நாடு மின் வாரியத்தை அடிமாட்டு விலைக்கு கொடுக்க துணிந்து விட்டீர்களா CM sir?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று அப்பாவு மின்சாரத்துறையில் ரூ. 2000 கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டியிருந்த நிலையில் இன்று "மின் வாரியத்தை அடிமாட்டு விலைக்கு கொடுக்க துணிந்து விட்டீர்களா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர், "தமிழ்நாட்டில் இந்த ஆட்சி வந்த பின் தொழில் வளர்ச்சிக்காக செயல்படும் guidence தமிழ்நாடும், தொழில் துறை அமைச்சரும், உங்கள் #ஆந்திரா_ரெட்டி_கேங் -கும் சேர்ந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய அனைத்து தொழில் நிறுவனங்களையும் #ஆந்திராவிற்கு அனுப்பி விட்டு ஆந்திரா முதல்வரின் - #டூப் முதல்வராக தமிழ்நாட்டில் செயல்பட்டு தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பை ஆந்திராவிற்கு அனுப்பும் துரோக செயலை தமிழ்நாடு இளைஞர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் CM sir ?" எனக் கூறியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.