வங்கக்கடலில் இன்று உருவாகும் அக்வான் புயல் இன்று தீவிர புயலாக மாறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி தீவிர புயலாக மாறும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கு நிலை கொண்டு நகர்ந்து வருகிறது. இந்த புயலுக்கு ஈரான் பரிந்துரைத்த AKVAN (அரக்கன் என பொருள்படும்) பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அர்னாப் புயல் அடுத்த 2 நாள்களில் மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா கடலோரப் பகுதியை நோக்கி நகரக் கூடும் என்றும்டீ தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் மேலும் கடல் சீட்டுத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்க கடல் பகுதி, மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு வலுப்பெறும் போது வீசும் காற்றானது 25 கிலோ மீட்டர் முதல் 30 கிலோமீட்டர் வரையிலும் அவ்வப்போது 46 கிலோ மீட்டர் வரையும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. கடந்த 13ஆம் தேதி முதல் இந்த தடை அமலில் இருப்பதால் இன்று நான்காவது நாளாக தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு, நாட்டுப்படகு. பைபர் படகு, மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரை உள்ள மீன்பிடி கிராமங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நான்கு நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
மேலும் தடையை மீறி கடலுக்கு செல்லும் மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது. இன்று, காலை 05:30 மணி நிலவரப்படி, இது அதே பகுதியில், நிலை கொண்டுள்ளது. இது திரிகோணமலையிலிருந்து (இலங்கை) கிழக்கு-வடகிழக்கே சுமார் 630 கி.மீ தொலைவிலும், ஸ்ரீ விஜயபுரத்திலிருந்து (அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்) மேற்கே 680 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து (தமிழ்நாடு) கிழக்கு-தென்கிழக்கே 720 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) தெற்கு-தென்கிழக்கே 820 கி.மீ தொலைவிலும் மற்றும் கோபால்பூரிலிருந்து (ஒடிசா) தெற்கே 940 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை வேளையில், தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்கக் கடல் பகுதியில் இது தீவிரமடைந்து புயலாக' மாறக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, நாளை மாலை வேளையில், மேற்கு-மத்திய வங்கக் கடல் பகுதியில் இது மேலும் தீவிரமடைந்து தீவிர புயலாக' மாற வாய்ப்புள்ளது என்றும் கணிக்கப்படுகிறது. அதன் பிறகு, இது மேலும் வலுவடைந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 19 இரவு வாக்கில் ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு அருகில், 'மிக தீவிர புயலாக' மேற்கு-மத்திய வங்கக் கடலை வந்தடைய கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.