

நவம்பர் 16ஆம் தேதி மாலையில் மத்திய வங்கக்கடலில் புயல் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஈரான் பரிந்துரைத்த AKVAN (அரக்கன் என பொருள்படும்) பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மத்திய அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் நேற்று நிலவிய வளிமண்டலச் சுழற்சியின் தாக்கத்தால், தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காலை 05:30 மணிக்கு ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது இன்று காலை 08:30 மணி நிலவரப்படி அதே பகுதியில் நீடிக்கிறது.
இந்த தாழ்வுப்பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக' (well-marked low pressure area) வலுப்பெற கூடும். அதனைத் தொடர்ந்து, நவம்பர் 15 காலை வாக்கில் அதே பகுதியில் 'காற்றழுத்த தாழ்வு மண்டலமாக' (depression) வலுவடைய வாய்ப்புள்ளது. அதன் பிறகு, இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16 மாலை புயலாக' (cyclonic storm) மேலும் வலுவடைய கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.