தமிழ்நாடு

ஆயுத பூஜை கொண்டாட்டம்..! ஆயுத்தமாகும் மக்கள்..!

Malaimurasu Seithigal TV

நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான நவராத்திாி விழா கடந்த 15-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து 9 நாட்கள் நடைபெறும் இதன் இறுதிநாளில் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்வதால், அந்த நாளை ‘சரஸ்வதி பூஜை’ என்ற பெயரில் கொண்டாடுகிறோம். இந்த நாளில் கலைகளில் தேர்ச்சி பெறவும், ஞானம் வேண்டியும் அனைத்துத் தரப்பினரும் வழிபாடு செய்வது வழக்கம். 

ஒரு மனிதனுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ, அதே போல அவர் செய்யும் தொழிலும் முக்கியத்துவம் பெற்றது. எனவே நாம் செய்யும் தொழிலையும், அதற்கான கருவிகளையும் இறைவனின் முன்பாக வைத்து வழிபடும் முறையும், இந்த நாளில் பின்பற்றப்படுகிறது. எனவே இந்த தினம் ‘ஆயுத பூஜை’ என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு அதிகாலையிலேயே அனைவரும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி, மாவிலை, வாழை கன்றுகள் கட்டி, சரஸ்வதியின் படத்திற்கு மாலை அணிவித்து, பொாி, அவுல், பொாிகடலை, சுண்டல் உள்ளிட்டவற்றை படையலிட்டு வழிபடுவா். மாணவா்கள் தங்கள் புத்தங்களை சரஸ்வதி தேவியின் முன்பு வைத்து வழிபடுவர். 

இதேபோல், அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் தொழில் புாிபவா்கள் உள்ளிட்டோர் தாங்கள் பயன்படுத்தும் உபகரணங்கள், ஆயுதங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றிக்கு சந்தனம், குங்குமம் இட்டு வழிபடுவர். 

இதனையொட்டி, கடை வீதிகளில் பூஜை பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அதிகாித்து காணப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நொிசல் ஏற்பட்டது.