``பிக்பாஸ் முத்துக்குமரன் தலைமறைவு.." 3 தனிப்படை அமைத்த காவல்துறை.. இதுவரை நடந்தது என்ன? 
தமிழ்நாடு

``பிக்பாஸ் முத்துக்குமரன் தலைமறைவு.." மடக்கி பிடிக்க 3 தனிப்படை.. வஹிதா கொடுத்த வழக்கில் அடுத்த அப்டேட்!

இவர் தன்னிடம் நெருங்கி பழகி திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக இன்ஸ்டாகிராம் பிரபலமான வஹிதா என்ற பெண் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

Antony Ajay R

பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் மீது தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக வஹிதா என்ற இளம் பெண் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முத்துக்குமரன் தற்போது தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவரைப் பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்துள்ளனர்.

தனது தமிழ் மேடைப் பேச்சுகள் மற்றும் பிக்பாஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் முத்துக்குமரன்.

Muthukumaran

இவர் தன்னிடம் நெருங்கி பழகி திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக இன்ஸ்டாகிராம் பிரபலமான வஹிதா என்ற பெண் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து பல வீடியோக்களில் தனக்கும் முத்துக்குமரனுக்கும் இடையிலான உறவு எப்படி தொடங்கி காதலாக மாறியது என விளக்கமாக கூறினார் வஹிதா. அவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வஹிதா தன்னைப் பற்றி அவதூறு கருத்துக்கள் தெரிவித்து தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக முத்துக்குமரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரில் வழக்கு பதிவு செய்வதற்கான முகாந்திரம் இல்லை என காவல்துறை தெரிவித்தது.

இந்தநிலையில் முத்துக்குமரன் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் வீடியோக்களுக்கு ரியாக்ட் செய்து வந்தார் வஹிதா.

இந்தநிலையில் முத்துக்குமரன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி தொடர்பில் இருந்ததாக வஹிதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 69ன் கீழ் முத்துக்குமரன் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக முத்துக்குமரனுக்கு சமமன் அனுப்பி நேரில் ஆஜராக செய்து விசாரணை நடத்த காவலர்கள் திட்டமிட்டனர். ஆனால் கடந்த 5 நாட்களாக முத்துக்குமரன் வீடு பூட்டிக்கிடப்பதாகவும் அவர் தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரைப் பிடிக்க 3 தனிப்படை அமைத்துள்ளது காவல்துறை.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்