"அவருதான் அப்ரோச் பண்ணினாரு.." அந்த இரவில் நடந்தது என்ன?.. விளக்கமாக பேசிய வஹிதா.. ஆணையரிடம் புகார்!

நான் மருத்துவமனையில் இருந்தபோது அந்த சம்பவத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என சொல்ல சொல்லி உதவி கேட்டார். கெஞ்சி பார்த்தார். ஒரு கட்டத்தில் 'நான் தற்கொலை செய்துகொள்வேன்' என்று மிரட்டினார்.
"அவருதான் அப்ரோச் பண்ணினாரு.." அந்த இரவில் நடந்தது என்ன?.. விளக்கமாக பேசிய வஹிதா.. ஆணையரிடம் புகார்!
"அவருதான் அப்ரோச் பண்ணினாரு.." அந்த இரவில் நடந்தது என்ன?.. விளக்கமாக பேசிய வஹிதா.. ஆணையரிடம் புகார்!
Published on: 
Updated on: 
2 min read

பேச்சாளரும் மீடியா பிரபலமுமான முத்துக்குமரன், தனக்குப் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றிவிட்டதாக வஹிதா அக்தர் என்ற பெண் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், "முத்துக்குமரன் என்னிடம் பொய்யான சத்தியங்களைச் செய்து, உடல்ரீதியாகப் பயன்படுத்திக்கொண்டதற்கு எதிராகப் புகார் அளித்துள்ளேன். இத்தனை நாட்களாக அவரது பெற்றோரிடம் பேச முயற்சி செய்தேன். ஆனால், அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால் பொறுமை இழந்து புகார் அளித்திருக்கிறேன்.

கடையநல்லூர் பிரச்சினை நடந்தபோதுதான் அவராக எனக்கு மெசேஜ் செய்தார். துணையாக இருப்பதாகக் கூறினார். ஏற்கெனவே இரண்டு முறை சந்தித்திருக்கிறோம். மூன்றாவது முறை சந்தித்தபோது பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து என்னைப் பயன்படுத்திக்கொண்டார்" என்று தெரிவித்தார்.

அதன்பிறகு தான் திருமண உறவுக்கு தயாராக இல்லை எனக் கூறிவிட்டார். என்னை தொடர்புகொள்ளவே இல்லை. நான் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன். அதனால் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.

Wahida Begum suicide attempt
Wahida Begum suicide attempt

நான் மருத்துவமனையில் இருந்தபோது அந்த சம்பவத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என சொல்ல சொல்லி உதவி கேட்டார். கெஞ்சி பார்த்தார். ஒரு கட்டத்தில் 'நான் தற்கொலை செய்துகொள்வேன்' என்று மிரட்டினார்.

அதன்பிறகு நான் பேச நினைத்தபோது அவர் மறுத்துவிட்டார். அவர் பெற்றோரிடம் பேச முயற்சி செய்தேன். அவர்களும் பிரச்சனையை தீர்க்க தயாராக இல்லை. அதனால் இப்போது புகார் அளிக்கிறேன்." என பேசியுள்ளார்.

மற்றொரு நேர்காணலில் முத்துக்குமரனுடன் செலவழித்த இரவு குறித்து பேசியுள்ளார். "எனக்கு குடிக்கணும் போல இருக்கு என நான் தான் சொன்னேன். அவர் ஏதோ ஒன்று வைத்திருந்தார், அதைக் கொடுத்தார் நான் குடித்தேன்.

அன்று எல்லாம் அழகாகவும் நம்பிக்கை கொடுப்பதாகவும் இருந்தது. அவர்தான் அப்ரோச் பண்ணினாரு, நான் முத்தம் கொடுக்க கூட தயாராக இல்லை. அவர் கை, கால், பாதம் என ஆயிரம் மூத்தம் கொடுத்தார்... அவர் அவ்வளவு தீவிரமாக இருந்தபோது அவரை நம்பினேன். நான் முட்டாளாக இருந்துவிட்டேன்.

அடுத்தநாள் என் முந்தைய காதலரிடம் "நான் கமிட் ஆகிவிட்டேன்" என மெசேஜ் செய்தேன்.

முத்துக்குமரன் என்னை மீண்டும் பார்க்கணும் போல இருக்கு என சொல்லி அழைத்தார். நான் அவரிடம் பேசுவதற்காக சென்றேன். அப்போது என்னை குடிக்க வைக்க முயற்சி செய்தார். நான் தட்டி விட்டேன். அதன்பிறகு எனக்கு சாப்பாடு ஊட்டி விட்டார்.

எனக்கு நேரம் வேண்டும் என்பதனால், மெதுவாக உறவை நகர்த்தலாம் என சொன்னேன். ஆனால் அவர் மீண்டும் மீண்டும் உடலுறவுக்கு அழுத்தம் கொடுத்ததால் நள்ளிரவில் பெட்டில் இருந்து பதட்டமாக எழுந்து அவர் வீட்டில் இருந்து ஓடி சென்று கேப் புக் செய்து வீட்டுக்கு வந்தேன்.

ஏற்கெனவே அவரிடம் பேசும்போது, நான் உடல்ரீதியான உறவுக்கும், கேசுவல் உறவுக்கும் தயாராக இல்லை என அவரிடம் கூறியிருந்தேன். நான் சீரியஸ் கமிட்மெண்ட் உள்ள உறவுக்காக மட்டும் தான் பழக்கினேன். அவர், "சீரியஸ் கமிட்மெண்டுக்கு ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்ள நீண்டநாட்கள் ஆகலாம்." என சொன்னார்.

இரண்டாவது முறை நாங்கள் சந்திக்கும்போதே என்னை திருமணம் செய்துகொள்வதாக வாயை விட்டார். ஆனால் எதுவும் சேட்டில் இல்லை." எனப் பேசியுள்ளார்.

"அவர் என்னிடம் தாலி கட்டுவேன் என்று சொல்லிதான் ஏமாற்றினார். அதனால் தாலி கட்ட வேண்டும்." என்றும் பேசினார்.

முன்னதாக வஹிதா தன்னைக் குறித்து அவதூறாக பேசுவதாக முத்துக்குமரன் காவல் ஆணையாரிடத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால் அந்த புகாரில் நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இல்லை எனவும், தேவைப்பட்டால் நீதிமன்றத்தை அணுகுமாறும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

"அவருதான் அப்ரோச் பண்ணினாரு.." அந்த இரவில் நடந்தது என்ன?.. விளக்கமாக பேசிய வஹிதா.. ஆணையரிடம் புகார்!
"அவருடன் தனிமையில் இருந்தேன்.." - பிக்பாஸ் முத்துக்குமரன் மீது வாஹிதா பேகம் குற்றசாட்டு! அடுத்தடுத்து 'டெலீட்' செய்யப்பட்ட பதிவுகள்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.