தமிழ்நாடு

” பாஜக இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி போல சித்தரிக்கப்படுகிறது ” - அண்ணாமலை.

Malaimurasu Seithigal TV

பாரதிய ஜனதா கட்சி இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பது போன்று சித்தரிக்கப்படுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவிட்டர் பதிவில் பா.ஜ.க. இஸ்லாமியர்களுக்கு எதிரானது என பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளுபவர்கள் சித்தரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகளில் இஸ்லாம் மதத்தை தழுவும் 13 நாடுகள் அந்தந்த நாடுகளில் மிக உயரிய விருதுகளை பிரதமர் மோடிக்கு கொடுத்து பெருமை அடைய செய்துள்ளதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.