amitsha vs edapadi 
தமிழ்நாடு

அதிமுக -வை விழுங்கப் பார்க்கும் பாஜக ..! “இ.பி.எஸ் -க்கு அமித்ஷா செய்த துரோகம்!” - என்ன இவரு இப்படி சொல்லிட்டாரு..!

அதிமுக வின் எஸ்.பி. வேலுமணி ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் -ஐ சந்தித்தது மேலும் சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறது. இதனால் அதிமுக -விற்கு....

Saleth stephi graph

2026 தேர்தல்உண்மையில் இன்னும் 10 மாதங்களுக்கு தமிழ் நாடு அல்லோலப்படும் என்பதில் ஐயமில்லை. திமுக தனது கூட்டணி குறித்து மிகத்தெளிவானை போக்கை கொண்டுள்ளது. 

“எதிரிக்கு எதிரி நண்பன்" என்பது போல விஜயுடன் கூட்டணி வைக்கவே எடப்பாடி விரும்பினார். ஆனால் விஜய் இதற்கு இசைந்து கொடுப்பதாக தெரியவில்லை எனவே வேறு வழி இல்லாமல் பாஜக -வுடன் கூட்டணி வைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அதிமுக கூட்டணிக்கான விலைதான்  “அண்ணாமலை பதவி விலகளுக்கு” காரணம் என்றும் கூறப்பட்டது. ஆனாலும் எதுவுமே இல்லாத பாஜக -விற்கு அதிமுக -வின் கூட்டணி கிடைத்ததே பெரும் லாபம் தான்.  ஆனால் அதிமுக விற்கு அது பேரழிவு என்கின்றனர் ஆர்வலர் பலர்.

ஆனால் களத்தில் தேர்தல் வேலைகளை இன்னும் முடுக்கி விடாமல் இருக்கிறது அதிமுக. காரணம் பாஜக -வின் திட்டங்கள் எல்லாம் தமிழ்நாட்டின் கொள்கைக்கு எதிர்க்க இருப்பதால் அதை வைத்து வாக்கு சேகரிக்க முடியாது என எடப்பாடிக்கு நன்றாக தெரியும் அதனால்தான் இன்னமும் அமைதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

சூசகமாக சொன்ன அமித்ஷா

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற முருகர் மாநாடுதான் அதிமுக -வுக்கு மிகவும் பின்னடைவாக அமைந்துள்ளது. ஆனால் இது ஓரளவுக்கு பாஜக -வுக்கு சாதகமான சூழல்தான் அதனால்தான் அதிமுக - பாஜக கூட்டணி தொண்டர்கள் அளவில்  முன்னேறவில்லை. 

இந்து முன்னணி நடத்திய இந்த முருகர் மாநாட்டில் அதிமுக அமைச்சர்கள் இருக்கும்போதே “அண்ணாவையும் பெரியாரையும் குறித்து இழிவாக பேசினார்கள்” அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என கட்சிபெயரை வைத்துக்கொண்டு அண்ணாவை இழிவுபடுத்துவதை பார்த்துக்கொண்டிருக்கிறார்களே என்ற விமர்சனம் அப்போதும் எழுந்தது.

அதுமட்டுமின்றி அதிமுக வின் எஸ்.பி. வேலுமணி ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் -ஐ சந்தித்தது மேலும் சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறது.இதனால் அதிமுக -விற்கு நிச்சயம் பின்னைடைவு தான் என்கின்றனர் விமர்சகர்கள்.

இந்த நிலையில்தான் “தமிழகத்தில் பாஜக -அதிமுக கூட்டணி அமையும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி வருகிறார். அது ஏற்கனவே எடப்பாடியை கடுப்பாக்கியுள்ள நிலையில் தற்போது, “அதிமுக -விலிருந்து ஒருவர்தான் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவர்” என பேசியுள்ளார். ஏனெனில் எடப்பாடி தான் அடுத்த முதல்வர் என அதிமுக தொடர்கள் கூறிவரும் நிலையில் எடப்பாடி பெயரை கூட சொல்லாதது இன்னும் பெரிய சர்ச்சைகளை கிளப்பி விட்டிருக்கிறது. 

எடப்பாடிக்கு ஆப்பா!?

எடப்பாடி பழனிசாமி விருப்பமே இல்லாமல்தான் இந்த கூட்டணியை ஏற்படுத்தினார் என அரசியல் விமர்சகர்கள் சொல்லி வரும் நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக பாஜக -வின் எந்த ஒரு போராட்டம், ஆர்ப்பாட்டம் எதிலும் எடப்பாடி கலந்துகொள்ளவதில்லை. “இந்த சூழலில் கூட்டணியை உடைப்பதுதான் அதிமுக -விற்கு நல்லது என்ன தெரிந்தாலும், அதற்கு அமித்ஷா அனுமதிகே வேண்டுமே, எடப்பாடி தனது தனித்தன்மையை மட்டுமல்ல கட்சியின் தனித்தன்மையும் இழந்துவிட்டார், தற்போது அவரது முதல்வர் கனவுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதை,அமித்ஷா பேச்சின் மூலம் தெரிந்துகொள்ளலாம்” என்கின்றார் விமர்சகர் ராஜகம்பீரன்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.