amitsha vs eps 
தமிழ்நாடு

“பாஜக -வின் குறி திமுக இல்லை…” அமித்ஷா.. அண்ணாமலை செய்யும் துரோகம்!! - பகீர் கிளப்பும் மணி!!

அதிமுக- பாஜக கூட்டணியை மக்கள் விரும்பவில்லை என்று சொல்லி வந்த நிலையில் தற்போது அதிமுக -வின் ...

Saleth stephi graph

2026 தேர்தல் உண்மையில் இன்னும் 10 மாதங்களுக்கு தமிழ் நாடு அல்லோலப்படும் என்பதில் ஐயமில்லை. “எதிரிக்கு எதிரி நண்பன்" என்பது போல விஜயுடன் கூட்டணி வைக்கவே எடப்பாடி விரும்பினார். ஆனால் விஜய் இதற்கு இசைந்து கொடுப்பதாக தெரியவில்லை எனவே வேறு வழி இல்லாமல் பாஜக -வுடன் கூட்டணி வைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அதிமுக கூட்டணிக்கான விலைதான்  “அண்ணாமலை பதவி விலகளுக்கு” காரணம் என்றும் கூறப்பட்டது. ஆனாலும் எதுவுமே இல்லாத பாஜக -விற்கு அதிமுக -வின் கூட்டணி கிடைத்ததே பெரும் லாபம் தான்.  ஆனால் அதிமுக விற்கு அது பேரழிவு என்கின்றனர் ஆர்வலர் பலர்.

ஏற்கனவே அதிமுக- பாஜக கூட்டணியை மக்கள் விரும்பவில்லை என்று சொல்லி  வந்த நிலையில் தற்போது அதிமுக -வின் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அறிவாலயம் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். அன்வர் ராஜா அறிவாலயம் சென்ற உடனேயே அவரை கட்சியிலிருந்து நீக்கினார் எடப்பாடி, பல பெரிய தலைவர்களும் இந்த 

இந்த கூட்டணி அமைக்கப்பட்ட நாள் முதலே பாஜக -வினர் அதிமுக -வை முன்னிலைப்படுத்தவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மூத்த பத்திரிகையாளர் மணி பேசுகையில்”அதிமுக வை பலகீனப்படுத்துவதே பாஜக -வின் முக்கிய குறிக்கோள்!! 2026 தேர்தலில் திமுக வெற்றி பெற்றாலும் பரவாயில்லை எவ்வளவு தூரம் அதிமுக -வை பலவீனப்படுத்தமுடியுமோ அவ்வளவு தூரம் அதற்கான வேலைகளை முழுமூச்சுடன் செய்கிறது பாஜக. அமித்ஷாவிலிருந்து அண்ணாமலை வரை அனைவருமே இதைத்தான் செய்கின்றனர். பல தலைவர்கள், இன்னமும் விலகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னமும் கட்சி பலவீனப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது ” என பேசியுள்ளார். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.