அக்டோபர் 6ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலுக்கு பின்னர் தற்போது இன்று (அக் 09) வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போது தாராபுரத்தில், மதுராந்தகக்கத்திலும் தபால் வாக்குகள் எண்ணப்படத் தொடங்கியுள்ள நிலையில் தற்போதைய நிலவரப்படி தவெக முன்னிலையில் உள்ள நிலையில் திமுக பின்னடைவை சந்தித்துள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் தாராபுரத்தில் சத்யபாமாவும் மற்றும் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். அதன் பின்னர் இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர். இதனையடுத்து, அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், தவெக சார்பில் ராஜினாமா செய்த அதே MLA-களை நிற்க வைத்ததோடு, மதுராந்தகம் தொகுதியில் திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், சிபிஎம் சார்பில் சுகந்தி, நாதக சார்பில் ஜானகிராமன் ஆகியோர் போட்டியிட்டனர். தாராபுரத்தில், தவெக சார்பில் சத்யபாமா, அதிமுக சார்பில் பானுமதி, திமுக சார்பில் சுகன்யா, சிபிஐ சார்பில் லட்சுமணன், நாதக சார்பில் கார்த்திகா ஆகியோர் போட்டியிட்டனர்.
மேலும், இந்த இடைதேர்தலானது 5 முனை போட்டியாக இருந்தது. இடைத்தேர்தலில் தாராபுரத்தில் 80.25% வாக்குப்பதிவும், மதுராந்தகத்தில் 86.26% வாக்குகளும் பதிவாகியுள்ளன. மேலும், இந்த தொகுதிகளில் 14 மேஜைகளில் மொத்தம் 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த இரு தொகுதிகளும் 'அதிமுகவின் கோட்டை' என்றும் கூறப்படுகிறது. தற்போது மதுராந்தகத்தில் தபால் வாக்குகள் எண்ண தொடங்கியுள்ள நிலையில் தவெக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமாரவேல் 43 வாக்குகள் பெற்று முன்னிலையிலும், திமுக சார்பில் போட்டியிட்ட பரந்தாமன் 35 வாக்குகள் பெற்று பின்னடைவையும் சந்தித்துள்ளார். இவர்களை தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிட்ட கணிதா சம்பத் 17 வாக்குகளையும் பெற்றுள்ளார். தாராபுரத்தில், தவெக-வில் போட்டியிட்ட சத்யபாமா 46 வாக்குகள் பெற்று முன்னிலையிலும் திமுக சார்பில் போட்டியிட்ட சுகன்யா 48 வாக்குகள் பெற்று பின்னடைவையும் சந்தித்துள்ளார். இவர்களை தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிட்ட பானுமதி 23 வாக்குகளையும் பெற்றுள்ளார். இதன் அடிப்படையில் தவெக இரண்டு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
தற்போது வரை தவெக முன்னிலையில் உள்ள நிலையில், திராவிட கட்சிகளான திமுக, அதிமுக பின்னடைவையே சந்தித்துள்ளன. முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் தவெக சொற்ப வாக்கு வித்தியசத்திலேயே முன்னிலையில் உள்ளது. அதனால் முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்றும் கூறப்படுகிறது. 8 மணியளவில் தபால் வாக்குகள் எண்ணத் தொடங்கப்பட்ட நிலையில் 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குகள் எண்ணப்படும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், திமுக கூறுவதுபோல் மக்கள் தவெக ஆட்சியில் அதிருப்தியில் இருக்கிறார்களா?, அதிமுக தனது கோட்டையை மீண்டும் பிடிக்குமா? அல்லது தவெக மீண்டும் வாகை சூடுமா? என்பது கூடிய விரைவில் தெரியவரும். தற்போது வரை தவெக முனிலையில் உள்ள நிலையில் இடைதேர்தலுக்கான போட்டியில் முந்தி வந்து வெற்றிபெற போவது யார்? என்ற கேள்விக்கான பதில் காலை 11 மணிக்குள் கணித்து விடலாம் என்றும் இடைதேர்தலில் மகுடம் சூடப்போவது யார்? என்பதும் தெரியவந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்