இந்த ஆண்டின் சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று கடலூரில் உள்ள பாசர் தேசிய நெடுசாலையில் தேமுதிக நடத்திய “மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0” நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்ட நிலையில் மேடையில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ‘கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்பட்டு விட்டது ஆனால் அதை தற்போது அறிவிக்க வேண்டுமா என்பதுதான் எனது கேள்வி? இன்னும் தமிழகத்தில் எந்த கட்சிகளும் அவர்களது கூரணி குறித்து அறிவிக்கவில்லை நாமும் அவசரப்பட வேண்டாம்’ என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய விஜய பிரபாகரன் “பேரம் பேசுகிறோம் பேரம் பேசுகிறோம் என்று கூறுகின்றனர், அவர்களுக்கு எல்லாம் ஓபன் செலன்ஜ் செய்கிறார். 2005 ஆம் ஆண்டிற்கு முன்பு என்ன இருந்ததோ அது தான் இப்போது எங்களிடம் இருக்கிறது. பெட்டி வாங்குகிறோம் என்கிறார்கள். இவ்வாறு பேசுபவர்கள் கேப்டனின் கால் நகத்திற்கு கூட ஈடாக மாட்டார்கள். கேப்டன் ஆரம்பித்த கல்லூரி இப்போது நம்மிடம் இல்லை, கேப்டன் டிவி நம்மிடம் இல்லை இதற்கு எல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. தொண்டர்கள் நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்கள்.
இன்று எல்லோரும் எத்தனை தொகுதிகள் எத்தனை சீட்டுகள் என கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். ஆனால் நமது தேமுதிக மக்களுக்கு நன்மை செய்வதற்காக கூட்டணியை அமைப்போம். இன்று பல செய்தி நிறுவனர்கள் வருங்கால தலைவர்கள் யார் என கேட்டு விஜய், உதயநிதி,சீமான் ஆகியோரின் புகைப்படங்களை போடுகிறார்களால். ஆனால் விஜய பிரபாகரன் படத்தை போடுவதில்லை இதில் எனக்கு கவலை இல்லை எங்கு படத்தை போட்டால் பீனிக்ஸ் பறவை போல வந்து விடுவார்களோ என்ற பயமா? பயம் இருந்தால் சொல்லுங்கள்.
தற்போது ஜனநாயகன் பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. விஜய் அண்ணா நான் உங்களுக்கு தம்பியாக உங்கள் அண்ணனின் மகனாக ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் காங்கிரஸை நம்பாதீர்கள். அவர்கள் உங்களுக்கு சப்போர்ட் செய்வது போல தூண்டில் வீசுகிறார்கள் நம்பாதீர்கள். அவர்கள் கூட்டணியில் பேரம் பேசுவதற்காக உங்களுக்கு சப்போர்ட் செய்கிறார்கள். அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை நான் விருதுநகரில் தெரிந்துகொண்டேன். இதை ஏற்றுக்கொள்ளுங்கள் நல்லதுக்காக நான் சொல்கிறேன்” என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.