“தேமுதிக -வை அழைக்கும் செல்வப்பெருந்தகை..” தமிழக அரசியலில் இதுவரை நடக்காத ஒன்று..! என்ன செய்யப்போகிறார் இபிஎஸ்!?

”எனது கருத்து என்னவென்றால், நிச்சயமாக தேமுதிகவை கூட்டணிக்கு வரவேற்போம்”
selvaperunthakai invites dmdk for india allainace
selvaperunthakai invites dmdk for india allainace
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் தேமுதிக இணைந்தால் அது நிச்சயம் வரவேற்கத்தக்க ஒன்று” என தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருக்கிறார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க அதிமுக -விற்குள் கூட்டணி குறித்த கெளவிகளும் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் பார்த்தால் திமுக ஓரளவிற்கு ‘செட்டில்’ ஆகி உள்ளது என்றே சொல்லலாம். மேலும் ஒத்த சித்தாந்த கொள்கையுடைய கட்சிகளை கூட்டணி கட்சிகளாக கொண்டிருக்கிறது திமுக. 

மாநிலங்களவை சீட் விவகாரம்!

மாநிலங்களவை எம்.பி சீட் விவகாரம் தான் அதிமுக -வின் தற்போதைய பெரிய சிக்கல். தன் வசம் உள்ள 2 மாநிலங்களவை எம்.பி சீட்டை எடப்பாடி யாருக்கு ஒதுக்குவார்? என்பதுதான் தற்போதைய மிகப்பெரிய கேள்வி.

கடந்த தேர்தலில் அதிமுக தேமுதிக -உடன் கூட்டணியில் இருந்த போது இந்த முறை ராஜ்யசபா எம்.பி சீட்டை வழங்குவதாக எடப்பாடி உறுதி  அளித்திருந்தார், என பிரேமலதா கூறிவருகிறார், ஆனால் எடப்பாடி அந்த கூற்றை மறுத்துள்ளார், இதனால் தேமுதிக நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

ஆனால் எடப்பாடி பாமக கூட்டணியைத்தான் விரும்புகிறார், கரணம் 2022 இடைத்தேர்தலின்போது பாமக -அதிமுக கூட்டணி கணிசமான இடங்களில் வெற்றியை ருசித்தனர், தவிர அன்புமணியும் அதிமுக- பாஜக கூட்டணியை விரும்புவதால் அன்புமணிக்கு எம்.பி சீட் கிடைக்கும் வாய்ப்பு கணிசமாக உள்ளது.

ஆனால் இவர்களோடு, அண்ணாமலை, விந்தியா, ஜெயக்குமார், இன்பத்துரை, ராஜ சத்யன் ஆகியோருக்கும் எம்.பி சீட் வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

ஆகவே அதிமுக -வில் பாஜக கூட்டணி மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. தேமுதிக தங்களின் கூட்டணி குறித்து, அடுத்தாண்டு ஜனவரி -ல் தெரிவிப்போம் எனக்கூறியுள்ளார். இதுவே அவர்  அதிமுக மீது வருத்தத்தில் உள்ளார் என்பதை காட்டுகிறது. 

விஜயகாந்த் மறைவிற்கு தீர்மானம் நிறைவேற்றம்

இந்த சூழலில்தான் மதுரையில் நடந்த திமுக -பொதுக்குழு மாநாட்டில் “விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தீர்மானம்” நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி -ன் பிறந்த நாளுக்கு பிரேமலதாவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த போக்கு தேமுதிக, திமுக -வுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்பு உண்டு என்ற எண்ணத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

தேமுதிக -விற்கு அழைப்பு 

தற்போது தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பின்போது “தேமுகதிவை கூட்டணிக்கு வரவேற்கிறீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு செல்வப்பெருந்தகை,”எனது கருத்து என்னவென்றால், நிச்சயமாக தேமுதிகவை கூட்டணிக்கு வரவேற்போம்” என்று கூறியுள்ளார். 

ஏனெனில் திமுக-காங்கிரஸ் கூட்டணி என்பது நெடுங்காலமாக தொடரும் ஒன்று, அதிலும் குறிப்பாக “கூட்டணியின்போது திமுக நேரடியாக வெளிப்படுத்தாத எண்ணங்களை காங்கிரஸ் அவ்வப்போது வெளிப்படுத்திவிடும்” அப்படி ஒன்றாக தான் இந்த விஷயத்தை அரசியல் விமர்சகர்கள் அணுகுகின்றனர்.

2005 ஆம் கட்சி துவங்கியதிலிருந்து இதுவரை தேமுதிக - திமுக கூட்டணி அமைந்ததே இல்லை. ஒருவேளை இம்முறை அவ்வாறு நிகழ்ந்தால் அது முக்கியமான அரசியல் நகர்வாக இருக்கும்.

திமுக -விற்கு பெரிய லாபம் இல்லை!

ஒரு வேளை தேமுதிக இணைந்தாலும், இணையாவிட்டாலும் திமுக -விற்கு பெரும் தாக்கம் ஒன்றும் இல்லை. ஏனெனில் பல நாட்களுக்கு முன்னரே தேமுதிக தனது வாக்குகளை வட தமிழகத்தில் இழந்து விட்டது. ஆகவே பெரும் மாற்றமில்லை. ஆனால் அதிமுக -விற்கு ஒட்டுமொத்த ஓட்டு வங்கியில் தேமுதிக-ன் தேவை இன்னமும் இருக்கிறது. எடப்பாடிக்கு இந்த சீட் பிரித்துக்கொடுக்கும் வேலை உண்மையில் தலைவலிதான்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com