தமிழ் சினிமாவை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று சென்னையில் உள்ள வீட்டில் உடல்நலக்குறைவால் காலமானார். 84 வயதான அவர் வயது மூப்பின்கரமாகவும், உடல் நலக்குறைவின் காரணமாகவும் சிகிக்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலையில் இயற்கை எய்தினார். அவரது மறைவு தமிழ் திரைப்படத் துறையினரையும், ரசிகர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. பல்வேறு நடிகை, நடிகர்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய மிகப்பெரும் வரலாற்று சாதனை புரிந்தவர் பாரதிராஜா. குறிப்பாக ராதிகா, ராதா, கார்த்திக் மற்றும் ரேவதி போன்ற பல்வேறு முன்னை நடிகர்களை அறிமுக படுத்தியுள்ளார்.
தற்போது அவருடைய இறப்பிற்கு தமிழ் திரைத்துறையினர் மட்டுமின்றி, பல்வேறு இந்திய பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அவருடனான நெகிழ்ச்சி தருணங்களை பகிர்ந்து நினைவு கோர்த்து நன்றி தெரிவித்தும் வருகின்றனர். நாளை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து என்றும் அறிவித்துள்ளது. "பாரதிராஜாவுக்கு இரங்கல் செலுத்தும் விதமாக நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகள் ரத்து” என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
காலையில் தமிழக முதல்வரும் நடிகருமான விஜய் அவருக்கு தனது அஞ்சலியை செலுத்தி, அவரது குடும்பத்தாருக்கு இரங்கல்களை தெரிவித்தார். இசைஞானி இளையராஜா அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி “பாரதிராஜா ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” என்றும் தெரிவித்துக்கொண்டார். முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்திய பின்னர், இயக்குனர் பாரதிராஜா குறித்து ‘தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இரங்கல் பதிவு செய்தார்.
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நேரில் இயக்குனர் பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் “உயிரோடு இருக்கும் போதே அவரை பார்க்கணும்னு சொன்னேன். சரியாகிடுவாரு அப்போ வாங்கனு சொல்லிட்டே இருந்தாங்க. லாஸ்ட் டைம்ல அவர உயிரோடு பார்க்க "முடியாமலே போயிடுச்சு" வருத்தம் தெரிவித்தார். நடிகர் கமல்ஹாசன் அவர்கள், நேரில் அஞ்சலி செலுத்தி கூடுவதற்கு இரங்கலை தெரிவித்துக்கொண்டார். இவர் பாரதிராஜாவின் முதல் படமான ‘16 வயதினிலே’ என்று திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
“சினிமாவில் ஒரு சரித்திரமாக இருந்தவர் இயக்குநர் பாரதிராஜா, இன்று நம்மை விட்டு பிரிந்துவிட்டார்” முதலமைச்சர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், நேரில் அஞ்சலி செலுத்தினர். இயக்குனரும் நடிகருமான டி. ராஜேந்திரன் அவர்கள், “அவருடைய மறைவு செய்தி மனதை ஈட்டி போல் தாக்குகிறது” என்றும் “ நெஞ்சம் தாங்கவில்லை” என்றும் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.
மேலும் பல அரசியல் தலைவர்களும் அஞ்சலி தெரிவித்து, இரங்கலை பதிவு செய்தனர். "திரை உலகின் ஈடிலா பேரொளி அணைந்துவிட்டது” - வைகோ, "சமூக அக்கறை மிக்க சிந்தனையாளராக திகழ்ந்தார்” -நயினார் நாகேந்திரன், "திரைத்துறையை மண் வாசனையால் நிரப்பியவர்” - ஈபிஎஸ், பாரதிராஜா மறைவிற்கு இரங்கல்" - ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் “களப் போராட்டங்களில் பங்காற்றியவர் பாரதிராஜா” -இந்திய கம்யூனிஸ்ட் ஆகியோர் திணைக்களது இனக்களி பதிவு செய்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.