surya  
தமிழ்நாடு

“பொள்ளாச்சியில் இருந்து வந்த காதலன்” - பைக்கில் ஏறி சென்ற 14 வயது காதலி.. தாத்தாவின் எண்ணிற்கு வந்த குறுஞ்செய்தி!

தொடர்ந்து சூர்யாவுடன் இன்ஸ்டாகிராமில் நட்பாக பழகி வந்த சிறுமியை சூர்யா இது காதல் தான்

Mahalakshmi Somasundaram

சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் தனது தாத்தா பாட்டி வீட்டில் தங்கி 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி தனது போனில் இன்ஸ்டாகிராம் பதிவிறக்கி பயன்படுத்தி வந்த நிலையில் பொள்ளாச்சியில் 19 வயதான சூர்யா என்பவருடன் சிறுமிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து சூர்யாவுடன் இன்ஸ்டாகிராமில் நட்பாக பழகி வந்த சிறுமியை சூர்யா இது காதல் தான் என நம்ப வைத்துள்ளார். பின்னர் சிறுமியிடம் அவ்வப்போது வீடியோ காலில் பேசி வந்த சூர்யா, சிறுமியை நேரடியாக பார்க்க முடிவு செய்து பொள்ளாச்சியிலிருந்து நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தின் மூலம் சென்னை ஆவடி வந்துள்ளார்.

பின்னர் சிறுமியிடம் பேசி தான் இருக்கும் இடத்திற்கு வரவழைத்து சூர்யா சிறுமியை பொள்ளாச்சிக்கு அழைத்து செல்வதாக கூறி தாம்பரத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றுள்ளார்.இந்நிலையில் பேத்தியை வெகுநேரமாகியும் காணவில்லை என பதட்டமடைந்த சிறுமியின் பாட்டி, இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

புகாரை ஏற்ற போலீசார் சூர்யாவையும் சிறுமியை தேடி வந்த நிலையில் சிறுமியின் தாத்தாவின் போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் தாம்பரம் ஹோட்டலில் தங்க அறை எடுத்ததாக இருந்துள்ளது. ஹோட்டலில் தங்களது எண்ணை கொடுத்தால் பிரச்சனை வந்துவிடுமோ என எண்ணி சூர்யா சிறுமியின் தாத்தா என்னை கொடுத்து தன்னை தனே சிக்கவைத்து கொண்டுள்ளார். சிறுமியின் தாத்தா  தனக்கு வந்த குறுஞ்செய்தியை பற்றி போலீசாரிடம் கூறியுள்ளார்.  

குறுஞ்செய்தியை குறித்து  செய்தி அனுப்பிய ஹோட்டலுக்கு சென்று விசாரித்த போலீசார் அங்கு அறை எடுத்து இருந்த சிறுமியை மீட்டு சூர்யாவை கைது செய்தனர். மேலும் சூர்யா மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து  அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்