"சென்னைதான் ஹாட்ஸ்பாட்.." மொத்த நகரையும் நனைக்கப்போகும் மழை.. உஷார்படுத்தும் வானிலை ஆய்வாளர்! 
தமிழ்நாடு

"சென்னைதான் ஹாட்ஸ்பாட்.." மொத்த நகரையும் நனைக்கப்போகும் மழை.. உஷார்படுத்தும் வானிலை ஆய்வாளர்!

பகலில் சூரிய வெளிச்சம் இருக்கலாம் ஆனால் எங்கிருந்தோ திடீரென மழைப் பொழியத் தொடங்கும். கடலோரப் பகுதிகளில், இரவுகளிலும் அதிகாலை வேளைகளிலும் மழைப்பொழிவு உச்சத்தில் இருக்க வாய்ப்புள்ளது.

மாலை முரசு செய்தி குழு

இந்த ஆண்டின் வடகிழக்கு பருவமழை சில தினங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில் சென்னை பிரதானமாக சில நாட்கள் கணிசமான மழைப் பொழிவைப் பெற இருக்கிறது.

வெதர்மேன் ரிப்போர்ட்

அக்டோபர் 15ம் தேதி முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழைப் பொழிந்து வருகிறது. சென்னையிலும் அவ்வப்போது மழை பொழிந்தாலும் அடுத்த சில நாட்கள் முக்கியமானதாக இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரது எக்ஸ் தள பதிவில், "(மழையின்) கவனம் வட தமிழகத்தின் பக்கம் திரும்பியுள்ள நிலையில், சென்னை அதிக மழை பெய்ய வாய்ப்புள்ள மண்டலத்தில் (ஹாட்ஸ்பாட்) அமைந்துள்ளது. எனவே, அக்டோபர் 17-18 மற்றும் அக்டோபர் 21-22 ஆகிய நாட்கள் மிக நல்ல மழைப்பொழிவை எதிர்பார்க்கப்படும் முக்கிய நாட்களாகும்.

பகலில் சூரிய வெளிச்சம் இருக்கலாம் ஆனால் எங்கிருந்தோ திடீரென மழைப் பொழியத் தொடங்கும். கடலோரப் பகுதிகளில், இரவுகளிலும் அதிகாலை வேளைகளிலும் மழைப்பொழிவு உச்சத்தில் இருக்க வாய்ப்புள்ளது.

கே.டி.சி.சி (சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள்) முழுவதும் மழை நாட்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது." எனக் கூறியுள்ளார்.

வட சென்னையில் 9 செ.மீ மழை

கடந்த 24 மணிநேரத்தில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அதிகபட்சமாக 15 செ.மீ. என்ற அளவில் மிக கனமழை பெய்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை, பெரம்பலூர் மற்றும் லப்பைக்குடிக்காடு பகுதிகளில் தலா 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் முகையூர், சித்தலிங்கமடம், கள்ளக்குறிச்சி மாவட்டம் லக்கிநாயக்கன்பட்டி மற்றும் திருச்சி மாவட்டம் எலுப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 11 செ.மீ. மழை பெய்துள்ளது....

புதுச்சேரி, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், கள்ளக்குறிச்சி மாவட்டம் பொன்பரப்பி உள்ளிட்ட பகுதிகளில் தலா 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னை மாநகரைப் பொறுத்தவரை, பெரம்பூர் மற்றும் மாதவரம் பகுதிகளில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. முல்லை நகர் பகுதியில் 8 செ.மீ. மழையும், மணலி, மணலி புதுநகர், சென்னை வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் 7 முதல் 8 செ.மீ. வரை மழையும் பதிவாகியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.