சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்து வெற்றிகரமாக மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 116 கிலோ மீட்டர் தொலைவிற்கு செயல்படுத்தப்பட உள்ள இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில் ஓட்டுநர்கள் இல்லாத ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையில் 26 கிலோமீட்டர் தூரத்துக்கு மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் வழித்தடமாக பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான 10 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரயில் சேவை அடுத்த மாதம் (ஜனவரி 2026) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதற்கான பணிகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இதுவரை ஓட்டுநர் இல்ல மெட்ரோ ரயில்கள் மூன்று முறை சோதனை ஓட்டம் செய்யப்பட்டது. இதனிடையே பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனை ஓட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து அடுத்த மாதம் பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான மெட்ரோ சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் 10 மெட்ரோ நிலையங்கள் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதன் திறப்பு விழா அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் திருவிழாவில் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு மெட்ரோ சேவையை தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் போரூர் முதல் வடபழனி வரையிலான மெட்ரோ சேவையும் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஆனால் போரூர் முதல் வடபழனி வரையிலான மெட்ரோ சேவையில் தொடக்கத்தில் எந்த நிறுத்தத்தில் நிற்காமல் நேரடி சேவை மட்டுமே இருக்கும் என்றும் பின்னர் அனைத்து மெட்ரோ நிலையங்களின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த பிறகு வழக்கம் போல ரயில் இயக்கப்படும் எனவே மெட்ரோ நிறுவனம் தெரிவித்திருக்கின்றனர். மேலும் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ சேவை தொடக்கி சில மாதங்கள் லோகோ பைலட்கள் மூலம் ரயில் ஓட்டத்தின் தரம் கண்காணிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.