தமிழ்நாடு

அம்பேத்கருக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர்...!!

Malaimurasu Seithigal TV

சென்னை  ராஜா அண்ணாமலை புரத்திலுள்ள அண்ணல் அம்பேத்கரின் மணி மண்டபத்திலுள்ள அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அண்ணல் அம்பேத்கரின் 133வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு புதிதாகக் கட்டப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கரின் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அமைச்சர்கள் சேகர்பாபு,மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்,டி.ஆர் பாலு,மேயர் பிரியா ராஜன், வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.