CM Stalin hoist the national flag 
தமிழ்நாடு

“தியாகிகளை தொடர்ந்து போற்றுவது திமுக அரசு” - ஜார்ஜ் கோட்டையில் கொடி ஏற்றிய முதலமைச்சர்.. தனது தந்தை குறித்து பெருமிதம்!

கொடி ஏற்றுவதற்கு முன்பு முப்படை வீரர்கள் அணிவகுத்து முதலமைச்சருக்கு மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர்

Mahalakshmi Somasundaram

79 வது சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை ஜார்ஜ் கோட்டையின் முகப்பில் புதுப்பிக்கப்பட்ட கொடி கம்பத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கொடி ஏற்றி மரியாதை செய்தார். கொடி ஏற்றுவதற்கு முன்பு முப்படை வீரர்கள் அணிவகுத்து முதலமைச்சருக்கு மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் “தியாகிகளை தொடர்ந்து போற்றி வரும் அரசு திராவிட மாடல் அரசு, பெரும்பாலான தியாகிகளுக்கு மணிமண்டபம் சிலைகள் அமைக்கப்பட்டது திமுக ஆட்சியில் தான். 

கொடி ஏற்றும் உரிமையை பெற்று கொடுத்தவர் கருணாநிதி,” என்று கூறியுள்ளார். மேலும் விடுதலை போராட்ட வீரர்கள் ஓய்வூதியம், தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம், போன்றவற்றை உயர்த்தி அறிவித்துள்ளார். முன்னாள் படைவீரர்களின் வசதிக்காக சென்னை மதவாரத்தில் தங்கும் விடுதி அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார் இதனை தொடர்ந்து தகைசால் தமிழர் விருது, காலம் விருத்தி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை முதலமைச்சர் வழங்கி சிறப்பித்தார். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.